www.idhuthanislam.com

'இசை' இஸ்லாமிய பார்வையில்!

முஸ்லிம்

அப்டேட் 26-01-08

உலகெங்கும் வியாபித்துள்ள காற்றைப் போல இசையும் ஆகிவிட்டது. இசையின்றி பாடலில்லை என்ற நிலைமாறி இசையின்றி செய்தியுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கும் இசை, எதிலும் இசை என்று எல்லாவற்றிலும் இசை திணிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் உம்மத்தில் அது குறித்த ஆய்வுகளும் சர்ச்சைகளும் பல வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கின்றன.

இசை ஹராம் என்ற பெருவாரியான மார்க்கத் தீர்ப்புகளுக்கு மத்தியில் 'அவசரப்பட்டு அத்தகைய முடிவுக்கு வருவது சரியல்ல அதை ஹராம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை' என்ற எதிர் தரப்பு வாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இருதரப்பு வாதங்களையும் நிதானமாக அலசிய பிறகு நமக்கு கிடைத்தத் தெளிவை உங்கள் முன் வைக்கிறோம். இதில் குறைப்பாடுகள் - தவறுகள் இருப்பின் இக்கட்டுரையை தொகுக்கும் 'முஸ்லிமாகிய' நானே முழு பொறுப்பாகும்.

இசை ஹராம் என்பதற்கு ஒரு சாராரால் குர்ஆனிலிருந்து மூன்று வசனங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அந்த மூன்று வசனங்களும் இசையை ஹராமாக்குகிறதா என்பதை முதலில் பார்ப்போம்.

முதல் ஆதாரம்:

அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு. (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (இறைவனாகிய) அவன் கூறினான் (அல் குர்ஆன் 17:64).

தாபியீன்களின் காலத்திற்குப் பின் வந்த குர்ஆன் விரிவுரையாளர்களாகிய முஜாஹித் என்பவரும், அத்தஹாக் என்பவரும் மேற்கண்ட வசனம் பற்றிக் கூறும் பொழுது, ஷைத்தானானவன் தன்னுடைய குரலைக் கொண்டு இசையாலும், பாடல்களாலும் மற்றும் வேடிக்கை விநோதங்களாலும் மனிதர்களை குதூகலிக்கச் செய்கின்றான் என விரிவுரை தந்துள்ளனர். (தஃப்ஸீர் இப்னு கதீர்)

எந்த ஒரு சப்தம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதலை விட்டும் அவனைத் தடுக்கின்றதோ அத்தகைய சப்த ஒலிகளைப் பற்றித் தான் மேற்கொண்ட வசனம் குறிப்பிடுகின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இப்னு கதீர்)

இந்த வசனம், அது எந்த வகையான, எத்தகைய சப்தம், எத்தகைய கூப்பாடு எனக் குறிப்பிட்டுக் கூறவில்லையாயினும், எந்த சப்தம் இறை அழைப்பாக இல்லையோ, எந்த சப்தம் இறைவனுக்கு கீழ்ப்படிய அழைப்பு விடுக்கும்படி இல்லையோ அத்தகைய சப்தத்தைத் தான் மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது என்று அத்தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தஃப்ஸீர் தப்ரி)

நாம்:

இந்த வசனத்தில் இசைப் பற்றி நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த ஒரு குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த வசனத்தின் கருத்தோட்டங்களை ஊன்றி கவனிக்கும் போது பொதுவாக எந்தக் காரியங்களெல்லாம் இறைச் சிந்தனையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்புகிறதோ அந்தக் காரியங்கள் அனைத்திலும் ஷெய்த்தானின் பங்கு தீவிரமாக இடம் பெறும் வாய்ப்புள்ளது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. பிள்ளைகளும் செல்வங்களும் கூட இந்த வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதை எடுத்துக் காட்டி பிள்ளைகளும் செல்வங்களும் ஹராம் என்று யாரும் வாதிப்பதில்லை. அதே சமயம் அவைகளில் மூழ்கி இறைச் சிந்தனையை மறந்து விடக் கூடாது என்றே நாம் விளங்குவோம் பிறருக்கு விளக்குவோம்.

இதே அடிப்படையில் இசையையும் இங்கு சுட்டிக் காட்டப்படலாமே தவிர இந்த வசனம் இசையைத் தான் குறிக்கிறது என்று கூற முடியாது.

இரண்டாம் ஆதாரம்:

இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா? (இதனைப் பொருட்படுத்தாது) நீங்கள் சிரிக்கிறீர்கள்;. நீங்கள் அழுவதுமில்லை. (இதனைப் பற்றி) நீங்கள் அலட்சியமுடையோராகவும் இருக்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் இறைவனுக்கு சிரம்பணியுங்கள். (அவனையே) வணங்குங்கள். (அல் குர்ஆன் 53:59-60-61-62)

இங்கே நமது ஆதாரத்துக்குத் தேவையான வசனம் 61 ம் அதில் வரக் கூடிய 'வஅன்தும் சாமிதூன்' என்ற சொல் மட்டுமே. இதில் வந்துள்ள சொல்லாகிய (சாமிதூன்) என்ற சொல் மட்டுமே நமது ஆய்வுக்குரியது. இங்கு சாமிதூன் என்ற சொல்லுக்கு மூலச் சொல்லான சமதா என்பதற்கு, அரபி மொழி இலக்கண மற்றும் மொழியியலாளர்கள் பல்வேறு பொருள்களைத் தந்துள்ளார்கள். அதை வைத்துத் தான் குர்ஆன் மொழி பெயர்ப்பாளர்கள், வெவ்வேறான பல மொழி பெயர்ப்புக்களை, தமது மொழி பெயர்ப்புக் குர்ஆன் - களிலே பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

இங்கே, இமாம் அல் குர்தூபி அவர்கள் மொழி வழக்கிலே பல்வேறு விதமாகக் கையாளப்படும் பொருள்களைக் கீழே தருகின்றார்கள் :-

சாமிதூன் என்பதன் மூலச் சொல்லாகிய சமதா என்பது, ஒருவன் பெருமை கொண்டு தன் தலையை உயர்த்துதல் என்ற பொருளைத் தரக் கூடியது.

வினைச் சொல்லாக இருக்கும் பொழுது, பெயர்ச்சி சொல்லாகிய சமூத் என்ற சொல், ஓய்வாக இருத்தல் அல்லது பொழுதை வீணாகக் கழித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் அந்த வினையைப் புரிபவருக்கு (சாமித்) என்றாகி, யார் தன் பொழுதை வீணான முறையில் இசை இசைப்பதிலும் அல்லது இது போன்ற செயல்களிலும் விளையாட்டுத்தனமாத் திரிகின்றார்களோ அவர்களைக் குறிக்கும். அதே போல பெண்பாலில் இச் செயலைப் புரிபவளுக்கு அஸ்மிதினா (உனது பாடலைக் கொண்டு எங்களை உற்சாகப்படுத்து) என்ற பொருளைத் தரக் கூடியது.

இருப்பினும், சாமித் என்பது, ஒருவன் தற்பெருமை கொண்டு, கர்வம் கொண்டு தலையை உயர்த்தித் திரிதில் என்று மிகப் பழைய அரபி அகராதியாகிய அஸ்-ஸிஹாஹ் - ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமதா எனும் சொல்லுக்கு அசைவற்று இருத்தல், வீணாக சோம்பி இருத்தல் என்ற பொருளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல் ஜமாயிலி அஹ்காமில் குர்ஆனில் அல்-மஹ்தவி என்பவரால், சமதா என்ற சொல்லுக்கு கீழ்க்காணும் முறையிலும் பொருள் தரப்பட்டுள்ளது. அதாவது, ஒருவனைக் கேலி மற்றும் வீணானவற்றைக் கொண்டு வழிபிறழச் செய்தல் ஆகும்.

இறுதியாக முப்ரித் என்பவர், சாமிதூன் என்பதற்கு , சாமிதூன் என்றால் காமிதூன் அதாவது அசைவற்றிருத்தல் அமைதி ஆகிய பொருளைக் குறிக்கும் என்கிறார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது, சாமிதூன் என்பது எங்கெல்லாம் திருமறை ஓதப்படுகின்றதோ, அப்படி ஓதப்படும் திருமறை வசனங்களை பிறர் செவியேற்காத வண்ணம் ஆடியும், பாடியும் கூச்சலிட்டு விளையாடியும் கெடுதல் செய்வார்களே முஷ்ரிக்குகள், அவர்களது இந்தப் பழக்கத்தைத் தான் குறிக்கும் என்கிறார்கள். (தப்ஸீர் குர்தூபி)

மேற்கண்ட அர்த்தம் தான் எமன் மக்களாலும் கையாளப்படுகின்றது.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதற்கு இரண்டாவதாக ஒரு பொருளையும் தருகின்றார்கள் :-

அதாவது, தமது வேலையை (பிரச்னைகளை) எளிதாக்கிக் கொள்வதற்காக விளையாட்டிலும், பொழுது போக்கிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்கள். இதே கருத்தை தாபியீன்களாகிய இக்ரிமா அவர்களும் மற்றும் அத்தஹாக் அவர்களும் ஆமோதித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், மூன்றாவதாக இந்த கீழ்க்காணும் விளக்கத்தையும் தந்துள்ளார்கள். ஆதாவது, ஒருவன் தற்பெருமை கொண்டு தலையைத் தூக்கித் திரிவதைக் குறிக்கும்.

கதாதா அவர்கள், சாமிதூன் என்பது கவனமின்மையைக் குறிக்கும் என்றும், இது முஷ்ரிக்கீன்களின் பழக்கமாகும் என்றும் கூறியுள்ளார்கள். மேலும், முஜாஹித் என்பவர் கடுமையான கோபம் அல்லது ஆத்திரம் என்றும் பொருள்படும் எனக் கூறியுள்ளார்.

ஆக, சாமிதூன் என்ற சொல்லானது இரைந்து பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், தமது நேரங்களை வீணான வகையில் கழித்துத், தற்பெருமை கொண்டு தலையை உயர்த்திக் கொண்டு திரிபவர்களையும், அல்லது இறைமறையையும் அதன் வசனங்களையும் பிறர் காதில் விழா வண்ணம் இறை அழைப்பைத் தடை செய்யும் நோக்குடன் மூர்க்கத்தனமாக, கோபங் கொண்டு, ஆவேசத்துடன் திரிபவர்களையும் குறிக்கக் கூடிய பொருளைத் தெளிவான முறையில் தந்து நிற்கிறது. மேற்கண்ட செயல்முறையானது இஸ்லாத்திற்கு விரோதமான, மாறுபாடான அதன் மேல் அவர்களது கவனமின்மையையும் குறிக்கக் கூடிய ஒரு கருத்துச் செறிவைத் தந்து நிற்கிறது.

நாம்:

சாமிதூன் என்ற சொல்லுக்கு, கருத்து வழக்கில் பலவாறான பொருள்கள் கூறப்பட்டாலும், இசையைத் தடை செய்தவற்குண்டான நேரடியான பொருளைத் தந்து விடவில்லை. எனவே, இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்து நாம் இசைக்கு எதிரான தடைக்கான ஆதாரமாக முன் வைக்க முடியாது.

மொழி செரிவு மிக்கவர்கள் சில பதங்களுக்கு பற்பல அர்த்தங்கள் கொடுத்தாலும் ஒரு வசனத்துடைய மேல் - கீழ் தொடர்ச்சி அந்த வசனம் எந்த அர்த்தத்தில் வந்துள்ளது என்பதை புரிந்துக் கொள்வதற்கு பெரும் பங்காற்றும். எனவே இந்த வசனத் தொடர்களைப் பார்ப்போம்.

வரவேண்டிய நேரம் நெருங்கி விட்டது (57) அல்லாஹ்வையன்றி அதை வெளிபடுத்துபவர் எவருமில்லை (58) இந்த செய்திப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள் (59) உங்களுக்கு அழுகை வருவதில்லை சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் (60) அலட்சியப்படுத்துகிறீர்கள் (61) இறைவனுக்கே சிரம் பணிந்து வணங்குங்கள் (62)

இந்த வசனத் தொடர்கள் பளிச் சென்று மறுமை நிகழ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கின்றன. மறுமை உண்டா என்று கேலியாக ஆச்சரியப்பட்டு, அது குறித்து சிந்தித்து உள்ளங்களைப் பக்குவப்படுத்தாமல் சிரித்து கும்மாலமடித்துக் கொண்டு, மறுமை சிந்தனையையே அலட்சியப்படுத்தி விட்டு வாழும் மக்களை சுட்டிக்காட்டி, இறைவனை மறவாதீர்கள் அவனையே வணங்குங்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது. இதில் இசைக்கு எதிரான தடை எங்கும் தென்படவில்லை.

இசைக் கலக்காத அலட்சியங்கள், சிரிப்பு கும்மாலங்கள் இவைகளை இந்த வசனம் அங்கீகரிக்கவில்லை. இசைக்கும் போதோ அல்லது இசையாலோ ஏற்படும் உல்லாச உணர்வுகள் இசை இல்லாத பற்பல நேரங்களிலும் - நிகழ்வுகளிலும் ஏற்படத்தான் செய்யும். மறுமை சிந்தனையை மறக்கடிக்கும் அல்லது நினைவூட்டப்பட்டாலும் அலட்சியப்படுத்தும் ஒரு மனஇயலைத் தான் இந்த வசனம் சுட்டிக் காட்டிக் கண்டிக்கிறதே தவிர இசையை ஹராம் என்று சொல்லவில்லை. 'அன்தும் சாமிதூன்' 'நீங்கள் அலட்சியப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறீர்கள்' என்பதில் 'சாமிதூன்' என்ற பதம் மறுமையை அலட்சியப்படுத்தும் எந்த நபரையும், அவர் செய்யும் எத்தகைய காரியத்தையும் சுட்டிக் காட்டக் கூடிய ஒரு பதமாகும்.

மறுமை சிந்தனையுள்ளவர்கள் சிரிக்கவேக் கூடாது. அழுதுக் கொண்டே இருக்க வேண்டும். உலகப் பற்றிலிருந்து விடுபட்டு மௌனிகளாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆசாபாசங்கள் மனக் கிளர்ச்சிகள் அறவேக் கூடாது என்றெல்லாம் இந்த வசனம் சொல்வதாக புரிந்துக் கொள்ளக் கூடாது. மனித இயல்பிலிருந்து மாறுபடாமல் அனுமதிக்கப்பட்ட விதத்தில் உலகை அனுபவிப்பதற்கான எந்த தடையும் இந்த வசனத்தில் இல்லை. நாம் செய்யும் எந்தக் காரியமும் மறுமைப் பற்றிய சிந்தனையையும் அச்சத்தையும் நம் மனதிலிருந்து எடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையையே முன் வைக்கிறது. எனவே இசை தடைசெய்யப்பட்டது தான் என்பதற்கு இந்த வசனத்தைப் போதிய ஆதாரமாக முன் வைக்க முடியாது.

மூன்றாம் ஆதாரம்:

இறைவனின் பாதையை கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை திசை திருப்புவதற்காக அறிவின்றி வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோரும் மனிதர்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இழிவு படுத்தும் வேதனையுண்டு (அல் குர்ஆன் 31:6)

மூலத்திலுள்ள சொற்றொடர் 'லஹ்வல் ஹதீஸ்' ஆகும். இது மனிதனை முழுக்க முழுக்க தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு பிறவற்றை மறக்கச் செய்து விடும் விஷயம் எனப் பொருள்படும். குறைஷிகளின் அனைத்து எதிர் முயற்சிகளின் இடையேயும் நபி (ஸல்) அவர்களுடைய அழைப்புப் பணி தடைபடாமல் அதன் விளைவுகள் தொடர்ந்த போது, குறைஷிகள் ஈரானிலிருந்தும் மற்றும் இஸ்ஃபந்தியாரின் கதைகளை வரவழைத்து கதை சொல்லும் படலத்தைத் தொடங்கினார்கள். பாட்டுப்பாடும் அடிமைப் பெண்களையும் ஏற்பாடு செய்தார்கள். மக்கள் இவற்றில் மூழ்கி நபியவர்களின் பேச்சைக் கேட்காமலிருக்க வேண்டும் என்பதற்காக! (இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட், குர்ஆன் தமிழாக்கம், விளக்கவுரை பழைய பதிப்பு குறிப்பு 2. சூரா லுக்மான:06 வது வசனம்)

மேற்கண்ட வசனமானது, யார் ஏக இறையோனாகிய அல்லாஹ்வின் தூதைச் செவிமடுக்காமல், தங்களை வீண் கேளிக்கைகளில் மன மயக்கத்தை ஏற்படுத்துபவைகளில் ஈடுபடுத்திக் கொண்டும், நேரான பாதையினின்றும் விலகி தூரமான தீய வழிகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார்களே அவர்களைப் பற்றித் தான் இறைவன் மேற்கண்ட வசனம் மூலம் விளக்குகின்றான்.

மேற்கண்ட நமது ஆய்வுக்கு உட்பட்ட சொல்லாகிய 'லஹ்வல் ஹதீஸ்' பற்றி இப்னு ஜரீன் அத்தபரி அவர்கள் தனது ஜாமிஉல் பயானில் குறிப்பிடும் போது, மேற்கண்ட சொல்லுக்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளார்கள். அந்த சொல் பற்றிய அவர்களது விளக்கம் மூன்று வித பிரிவுகளில் நின்று அறிவுரை பகர்கின்றது.

பாடுவதும் அதைக் கேட்பதும்

பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஆண், பெண்ணை விலைக்கு வாங்குதல்

வீணாகப் பொழுதைப் போக்குவதற்காக (இசை)க் கருவிகளை வாங்குதல்.

மேற்கண்ட மூன்று விளக்கங்களும் குறிப்பில் எதை உணர்த்துகின்றதென்றால், வீணாக, வெறுக்கத்தக்கவைகளானவற்றையும், அதற்கான சாதனங்களையும் விலைக்கு வாங்கி, தங்களது பொருளையும், நேரத்தையும் அதில் வீணடித்தல்| குறிப்பாக இசையிலும், பாடலிலும் ஈடுபடுதலைத் தான் குறிக்கின்றது.

மேற்கண்ட விளக்கத்தை ஒட்டியே நபித் தோழர்களாகிய, இப்னு மஸ்ஊது (ரலி), ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர்களது கருத்தும் அமைந்திருந்தது. மேற்கண்ட சொல்பற்றி இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட பொழுது, எவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது பாடுவதையே குறிக்கும் என்றார்கள். மேலும், மேற்கண்ட தன்னுடைய நிலையை உறுதிப்படுத்துவதற்காக மூன்று முறை அதன் மேல் உறுதியிட்டுக் கூறி இருக்கின்றார்கள். (பைஹகி - இப்னு முன்திர்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, பாடுவதும் மற்றும் அதைப் போன்றதையும் குறிக்கும் என்றார்கள். (ஜாமிவுல் பயான்)

மேற்கண்ட வசனங்களிலிருந்து பாடுவதையும் இசைப்பதையும் தான் அந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றன என்பது விளங்குகிறது.

மேலும் இரண்டாது நிலை விளக்கமாக கீழ்க்கண்ட விளக்கவுரை அமைந்துள்ளது :

ஏந்த ஒரு உரையாடல் அல்லது பேச்சு இறை நிராகரிப்பின் பக்கம் மக்களை அழைக்கின்றதோ அல்லது இறை நிராகரிப்புக் கொள்கையைப் பெற்றிருக்கிறதோ அவற்றைக் குறிக்கக் கூடியது 'லஹ்வல் ஹதீஸ்' என்ற சொல் என நபித் தோழர்களுக்கு அடுத்த திருமறை விரிவுரையாளர்களான, அத்தஹாக் அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லம் ஆகியோர் கூறி இருக்கின்றார்கள். (இப்னு கதீர் - தப்ரி)

மூன்றாவது நிலை விளக்கம் :

யார் தங்களது கெட்ட பேச்சுக்கள் அல்லது தவறான பேச்சுக்கள் மற்றும் செயல் மூலம் மக்களை அல்லாஹ்வின் வழியினின்றும் அவனை வணங்குவதனின்றும், அவனை நினைவு கூர்வதிலிருந்தும் மக்களை வழி பிறழச் செய்து கொண்டிருக்கின்றார்களோ, அத்தகைய இயல்புகளைப் பெற்றிருப்பவரை இந்த 'லஹ்வல் ஹதீஸ்' எனும் சொல் குறிக்கும்.

உதாரணமாக ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவதாக, இமாம் ஆலாஸி அவர்கள் கீழ்க்கண்ட கூற்றைக் கூறுகின்றார்கள். யார் தங்களது இரவு நேரங்களை வீண் பேச்சுக்களிலும், கேளிக்கைகளிலும், சிரிப்பு மூட்டும் செயல்களிலும், கற்பனைக் கதை சொல்வதிலும், பாட்டுப் பாடுவதிலும் இன்னும் இது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு ஒருவனை அல்லாஹ்வை வணங்குவதினின்றும் அவனை நினைவு கூர்வதிலும் இருந்து மேற்கண்ட மற்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுமாறு செய்கின்றானோ அத்தகைய அனைத்து செயல்களையும் அந்தச் சொல் குறிப்பிடுகின்றது. (ரூஹூல் மஆனி)

இமாம் இப்னு ஜைத் அவர்கள் மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டு, இந்த வசனம் இறை நிராகரிப்பாளர்களையே, அவர்களின் தன்மைகளையே நோக்கி உரையாடுகின்றது என்பதை நீங்கள் அறியவில்லையா!? எனக் கூறி அதைக் கீழ்க்காணும் வசனம் மூலம் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.

சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகின்றார்கள் : இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்|இதன் மூலம் நீங்கள் வென்று விடலாம். (41:26)

மேற்கண்ட வசனம், குர்ஆனிய வசனம் ஓதப்படும் போது, அதை செவியேற்கா வண்ணம் தங்களது கூச்சல், கூப்பாடுகள் மூலம், குர்ஆனைச் செவியுறுவதனின்றும் பிறரை வழி கெடுக்கும் இணை வைப்பாளர்களைத் தான் குறிக்கிறது. ஏனவே, இந்த வசனம் முஸ்லிம்களைக் குறிப்பதல்ல என்கிறார் இமாம் ஜைத் என்பவர். (தப்ரி - குர்தூபி)

அத்தபரி அவர்கள் இது பற்றிக் குறிப்பிடும் போது, மேற்கண்ட 'லஹ்வல் ஹதீஸ்' சொல்லின் சரியான அர்த்தம் எது எனில், எந்த ஒரு பேச்சு அல்லாஹ்வின் நினைவினின்றும் ஒருவனைத் தடுக்கின்றதோ, அத்தகைய பேச்சு இறைவனாலும், அவனது தூதர் முஹம்மது (ஸல்)அவர்களாலும் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இதில் சில பேச்சுக்களுக்கு விதி விலக்கு உண்டு.

மேற்கண்ட அத்தபரி அவர்களின் கருத்துக்களிலிருந்து ஒரு சரியான தடைக்கு ஆதாரமான இல்லாமல், பாடலையும், இணை வைப்பையும் பொதுவான குறிப்பில் உணர்த்தி நிற்கின்றது.

மேற்கண்ட வசனம் இசைக்கும், பாடலுக்கும் எதிரான, பல்வேறு மொழிபெயர்ப்புக்களினுடனே, தற்செயல் விளக்கமாகத் தான் அதற்கான தடையைப் பெற்றுள்ளத தவிர, ஈமானிய நெஞ்சம் முழுமையான ஆதாரத்தைக் குர்ஆனின் ஒளியில் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. ஏனெனில், நாம் இன்னும் நேரடியான தடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஒரு மறைமுக தற்செயல் விளக்கத்தைத் தான் பெற்றுள்ளோம்.எனவே, மேலும் நாம் தெளிவு பெற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளை நாட வேண்டிய அவசிய அவசரத்தில் உள்ளோம்.

நாம்:

'சாமிதூன்' என்றப் பதத்தை எப்படி இசைக்கான நேரடித் தடையாக எடுத்துக் காட்ட முடியவில்லையோ அதே போன்று தான் 'லஹ்வல் ஹதீஸ்' என்ற பதமும். இதையும் இசைக்கான நேரடித் தடையாக எடுத்துக் காட்ட முடியாது. ஏனெனில் இசைக்கு எதிரான கருத்தில் உள்ள அனேக பெரும் அறிஞர்கள் கூட இந்த பதம் நேரடியாக இசையைத் தான் குறிக்கிறது என்று எங்கும் குறிப்பிடவில்லை. பற்பல அர்த்தங்களை முன் வைக்கும் போது இசையின் தாக்கமும் அதில் அடங்குவதால் அதையும் இணைத்துக் கூறியுள்ளார்களேத் தவிர இசையைத் தடைசெய்வதுதான் இந்த வசனத்தின் நோக்கம் என்ற கருத்தை யாரும் முன் வைக்கவில்லை என்பதை மேற்கண்ட அறிஞர்களின் கருத்துக்களை மீண்டும் ஒரு முறை படிக்கும் போது புரிந்துக் கொள்ளலாம்.

வீணாணவற்றை விட்டு விலகி இருப்பது இறை நம்பிக்கையாளர்களின் பண்பாக குர்ஆனின் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 'வீணாணவை என்பது இசையாகவோ - பாடலாகவோ - கதையாகவோ - விளையாட்டாகவோ - குடும்பமாகவோ - நண்பர்களாகவோ - செல்வமாகவோ - தொழிலாகவோ - இன்னப் பிற காரியங்களாகவோ இருக்கலாம்.

இறைவனை நினைவுக் கூறும் விதத்தில் இசைக் கலந்திருந்தால் அது ஹராமா, அல்லது இறை நம்பிக்கையும் மறுமை சிந்தனையும் நிறைந்த ஒருவன் இசைக் கேட்டால் அவன் ஹராத்தில் விழுந்தவனாகி விடுவானா என்பது பற்றியெல்லாம் எந்த அறிஞரும் கருத்தை மேற்கண்ட வசனங்களை விளக்கும் போது முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இசைக்கு எதிரான கருத்துள்ள அனைவருமே 'அது இறைவனை மறக்க செய்து விடும்' என்ற அச்சத்தையே முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். எல்லாவித இசைக்கும் இது பொருந்துமா என்ற சிந்தனைக்குள் யாரும் நுழையவில்லை.

உதாரணமாக, (உதாணத்திற்காகத்தான்)

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை.'

'அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ஓடிவரும் அந்த வல்லோனை நினைத்திருந்தால்

நல்ல வாழ்க்கையும் தேடி வரும்.'

'அருள் மழைப் பொழிவாய் ரஹ்மானே... ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே.. '

போன்ற பாடல்களில் இசைக் கலந்துள்ளது. இதை கேட்பதால் கேட்கும் இறை நம்பிக்கையாளன் இறைவனை மறந்து அல்லது இறைவனை கேலி கூத்தாக எடுத்துக் கொண்டு உலகியலில் மூழ்கி விடுவானா..

தொலைக் காட்சியில் - வானொலியில் செய்தி கேட்கும் - பார்க்கும் ஒருவனுக்கு இசை என்பதை தவிர்க்கவே முடியாது என்பதை ஆரம்பக் கால அறிஞர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் போயிருந்தாலும் இன்றைக்கு அனைவரும் அறிவர். இந் நிலையில் செய்தியை கேட்கும் - பார்க்கும் ஒருவன் அத்தகைய இசையால் மதியிழந்து - இறைவனை மறந்து போய்விட வாய்ப்புள்ளது என்று மேற்கண்ட வசனங்களை ஆதாரம் காட்டி கருத்துக்களை யாராவது வெளியிட முடியுமா.. போன்ற கேள்விகள் இங்கு பிறக்கத்தான் செய்கின்றன.

இறைவனை மறக்கடிக்கும் எல்லாக் காரியங்களுக்கும் அந்த வசனங்களைப் பொதுவாக பொருத்திக் காட்டாமல் இசைக்கு மட்டும் பொருத்திக் காட்டுவத சரியாகப்படவில்லை. ஏனெனில் அந்த வசனங்களில் நேரடியாக அந்த கருத்துக்கள் இடம் பெற்றிருக்கவில்லை.

 

 
Name: Azeezuddheen
email: skn_azeesudeen@...
Location:
Subject: Criticism
Message:

ஆக சினிமா பாடலாக இருந்தாலும் , அது அல்லாஹ்வை மறக்கடிக்கவில்லைஎன்றால் கேட்கலாம் என்று சொல்கிறீர்களா?

 

Name: abdul azeez
email: azeez1729@...

location: abudhabi
Subject: General
 

பெரும்பாலான இசைக்கருவிகள் மக்களது நேரத்தை பொழுதுபோக்கிற்காக வீணடித்துகொண்டிருக்கிண்றன அவ்வளவுதான். இன்றைய காலகட்டத்தில் ஆட்டம், பாடல், மது அருந்துதல், இசையைகேட்டு தன்னை மறந்து ஆடிக்கொண்டிருப்பது போன்றவைகள் ஒரு நிறுவனங்களின், அலுவலகங்களின், ஹோடேல்களின்...இன்னும் மற்ற நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வாக விளங்குகின்றது. இசை ஒருசிலரை வெற்றியின் சிகரத்திற்கு கொண்டு செல்கிறது. 2% விளையாடிற்காக மற்றவையோ தேவையில்லாதவை. இசை இஸ்லாத்தில் அனுமதிக்கக்கூடாது இதற்கு எந்த சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லை. மேற்கத்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள் இசை நோயை குணப்பதுத்தும் என்று. அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் மருத்துவர்கள் ஆல்கஹால் பயன்படுத்துகிறார்கள். இதில் தவறொன்றும் இல்லை. அவ்வாறு செய்யவில்லை என்றால் நோயாளி சில நேரங்களில் இறந்துவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நான் கூறுவது என்னவெனில், யாராவது இமாம் ஒவ்வொரு தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது யாரும் பேண்டு, புல்லாங்குழல்,  வீணை, தபேலா, போன்றவற்றை வைத்து இசைத்துக் கொண்டிருந்தால் யாராவது சரிகாண்பார்களா..?

 

Name: ansar
email: hssnansar@yahoo.com
Location: srilanka
Subject: Suggestion

தமிழ் இஸ்லாம் இணையத்தில் வெளிவந்த இசைப் பற்றிய கட்டுரையை இணைக்கிறேன் மேலதிக விளக்கம் வேண்டும்.

அண்ணல் நபி (ஸல்) அவகளின் ஏராள அமுத மொழிகள், இசைக்கும், பாடலுக்கும் அது சார்ந்த இசைக் கருவிகளுக்கும் எதிராகவே அமைந்துள்ளன. ஆத்தகைய இசைக் கருவிகளை இசைப்பதை இஸ்லாமிய ஷஷரீஅத் சட்டங்கள் தடையும் செய்துள்ளன. ஆனால், சில நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்கான நிலைகளில், ஷஷரீஅத் சட்டம் அனுமதியளிக்கும் நிலைகள் உள்ளன. ஆத்தகைய சந்தர்ப்பங்கள் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள் தெளிவாகவும் குறிப்பிட்டுள்ளன. பாடக் கூடிய பாடல் வரிகள் அமைப்பையும், இசைக்கக் கூடிய இசைக் கருவியின் வகை, அளவையும் கூட மிகத் துள்ளிதமாகக் கூறி நிற்கின்றன.

ஆனால், துரதிருஷஷ்டமாக, சில மார்க்க அறிஞர்கள் தம் போதாத ஞானத்தால்,இசைக்கும், பாடலுக்கும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் எதிராக வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை அல்லது புனைந்துரைக்கப்பட்டவை என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆத்தகைய அவர்களின் தவறான கருத்தைப் போக்கும் முகமாக இது விஷஷயத்தில் நாம் தீவிர ஆய்வில்

1. ஹதீஸும் அதன் தரங்களும் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்ள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.(புகாரி) (See Fathul Bari vol.10.p.51)

மேற்கண்ட ஹதீஸின் தரம் பற்றி, ஹதீஸ் கலை வல்லுநர்களுக்கும், அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையில் முதலில் இடம் பெறும் ஹிஸாம் இப்னு அம்மாருக்கும், இமாம் புகாரி அவர்களுக்கும் இடையே தொடர்பு அருந்துள்ளது என இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் குறிப்பிட்டு, இந்த ஹதீஸ் ஏற்புடையதல்ல என்றும் அதனால், இதைக் கொணடு பாடல், இசை, இசைக் கருவிகளுக்கு எதிரான ஆதாமாக மேற்கண்ட ஹதீஸை எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்.

ஆனால், மிகப் பெரும் ஹதீஸ் கலை வல்லுனராகிய ஷேக் இப்னுஸ் ஸலாஹ் தனது, உலூமுல் ஹதீஸ் என்னும் நூலில் மேற்கண்ட ஹதீஸ் முழு ஆதாரத்துடன், அறிவிப்பாளர் வரிசை சரியான முறையில் அமைந்தும், ஒரு ஹதீஸ் தரமானதாக அறிப்பயன்படும் அனைத்து முறைகளுக்கும் அதன் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு, தரமான ஹதீஸ் என் சான்றையும் பெற்றுள்ளது என்ற கருத்தை வழங்கியுள்ளார். மேற்கண்ட இப்னு ஹஸ்ம் அவர்களின் கூற்றை மறுக்க, இப்னுஸ்ஸலாஹ் உடைய கூற்றே போதுமானது என இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹுல் புகாரிக்கான விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிட்டுள்ளார். (For Details, refer to vol.10. p.52. of the Salafi Edi. Cairo)

மேலும், இப்னு ஹஜர் அவர்களின் தனிப்பட்ட நூலான, தஃலீகத் தஃலீக் என்னும் நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகின்றது. இதன் மூலம் அல் ஜாமீஈ அஸ் - ஸஹீஹ் எனும் நூலில் பலவீனமான ஹதீஸாகத் தவறான முறையில் குறிப்பிடப்பட்டிருப்பதை, மேற்கண்ட தஃலீகத் தஃலீம் என்ற நூல் மறுத்து, தரமான ஹதீஸ் என்ற சான்றைத் தருகின்றது.

மேலும் இப்னு ஹஜர் அவர்கள், இப்னு ஹஸ்ம் அவர்களின் கூற்றை மறுத்து, மேற்கண்ட ஹதீஸ் சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது எனவும், தனது நூலான தஃலீகத் தஃலீக் - ல் சான்று பகர்ந்துள்ளார்.

மேலும் நவீன கால அறிஞர்களிடம் ஹதீஸ் பற்றி சரியான அணுகு முறை அல்லது ஞானம் இல்லாததின் காரணமாக, தவறான முடிவை அறிவித்து விடுகின்றார்கள்.

உதாரணமாக, யூசுப் அல் கர்ளாவி அவர்கள் தனது, அல் ஹலால் வல் ஹராம் ஃபில் இஸ்லாம் எனும் நூலில், இசை பாடல் சம்பந்தமாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அதன் கருத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றது அல்லது பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன என ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் கலை வல்லுநர்கள் கூறுகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு : மேலும், யூசுப் அல் கர்ளாவி அவர்கள் குறிப்பிடும், ஃபிக்ஹ் கலை வல்லுநர்கள், ஷரீஅத் சட்ட ஆராய்ச்சி பற்றி அறிஞர்கள் ஆவார்கள். புக்ஹ் கலை வல்லுநர்களுக்கும், ஹதீஸ கலை வல்லுநர்களுகு;, வித்தியாசம் உண்டு. மேலும் ஹதீஸ் பற்றி விமர்சிக்க யூசுப் அல் கர்ளாவி அவர்கள், அல் புகாரி போன்றோ அல்லது அஹமத், இப்னு முயீன், அபுதாவூத்,  இப்னு அபி ஹாதிம், இப்னுஸ்ஸலாஹ், அல்- இராக்கி, இப்னு தைமிய்யா மற்றும் இப்னு ஹஜர் போன்ற ஹதீஸ் கலை வல்லுநர் அல்ல. அவர் பொதுவான மார்க்க அறிஞர்களான அல் கஸ்ஸாலி, இப்னுல் - அரபி, இப்னு ஹஸ்ம் போன்றவரே. இவர்கள் வழியாகத் தான் மேற்கண்ட ஹதீஸை யூசுப் அல் கர்ளாவி அவர்கள் பலவீனமானத என அறிவிக்கின்றார்கள். எனவே இது ஏற்புடையதல்ல.

மேலும் யூசுப் அல் கர்ளாவி அவர்கள் ஏராளமான ஸஹாபாக்களும், தாபியீன்களு; பாடல்களை ரசித்ததாகவும், அதில் அவர்கள் எந்த வித குற்றமும் காணவில்லை என்ற தவறான தகவலை தனது ஹலால் வல் ஹராம் ஃபில் இஸ்லாம் என்ற நூலில் பக்கம் 293 ல் குறிப்பிடுகின்றார். மேலும் யூசுப் அல் கர்ளாவி அவர்களும், இப்னுல் - அரபி, இப்னு ஹஸ்ம் அவர்களும் மார்க்க அறிஞர்கள் எனும் தங்களது தகுதியைத் தவறான முறையில் பயன்படுத்தி, தவறான தீர்ப்பு வழங்கியுள்ளார்கள் என இந்நூலின் மூல ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஏனெனில், எந்த ஹதீஸும் இல்லை என்பதற்கு முன், எனக்குத் தெரிந்த வரை என்ற வார்த்தையைச் சேர்த்திருப்பின் அவர்களது அடக்கத்தைக் காட்டியிருக்கும். (See Music and singing – Abu Bilal Musthafa A-Kanadip.17, FN No.58 and 59.)

மற்றும் காதி அபுபக்கர் இப்னுல்அரபி அவர்கள், பாடுவதைத் தடை செயக் கூடியதாக எந்த ஹதீஸும் இல்லை என்றும் இப்னு ஹஸ்ம் அவர்கள் பாடுவதையும், இசையையும் தடை செய்யும் அனைத்து ஹதீஸ்கள் தவறானவை, புனைந்துரைக்கப்பட்டவை என்கிறார்கள்.

மேற்கண்ட ஆய்வில், நாம் சுட்டிக் காட்டி இருக்கும் ஹதீஸானது, தரமானது என்ற நிலையைப் பெற்று, பாடல், இசைக்கு எதிரான தடையையும் அதற்குரிய சரியான ஆராதமாகவும் திகழுகின்றது.

2. புகாரி :

ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف

ஸஹீஹ் புகாரியிலிருந்து நாம் மேற்கோள் காட்டியுள்ள ஹதீஸின் அரபி மூலத்தில், நம் ஆய்வுக்குத் தேவையான பாகம் மட்டும் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஒரு காலம் வரும், அப்பொழுது எனது உம்மத்தவர்கள் விபச்சாரத்தையும், பட்டு அணிவதையும், மது அருந்துவதையும், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதையும் தமக்கு ஆகுமானதாக ஆக்கிக் கொள்வார்கள்.

இதில் நம் ஆய்வுக்கு உட்படும் வார்த்தை معازف (மஆஸிஃப்) என்பது மட்டுமே. இது தான் இசைக் கருவிகளைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்லாகும். அரபி மொழியின் மூல அகராதியாகிய லிசானுல் அரப் என்ற நூலில் மஆஸிஃப் என்பது مزاف மிஸாஃப் அல்லது أزف அஸ்ஃப் என்ற சொல்லின் பன்மை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அர்த்தமாக, ஒரு பொருளைக் குறிப்பிடுவது அல்லது இயக்குதற்குரிய கருவி அல்லது பொழுது போக்கிற்காக அவர்களின் சப்தத்திற்கு ஏற்றவாறு தாளமிடக் கூடியது என்ற பொருள்களைத் தருகிறது. மேலும் மிஸாப் என்ற சொல், ஒருமையில் பெரிய மரத்தாலான மத்தளம் என்று எமன் மக்களால் அர்த்தம் கொள்ளப்பட்டதும் ஆகும். பேயர்ச்ச சொல்லாகிய அஸ்ஃப் ஆனது, معازف மஆஸிஃப் - ஐ இயக்கக் கூடிய செயலைக் குறிக்கும். அதாவது, கை மத்தளம் அல்லது அது போல அடித்து ஓசை எழுப்பக் கூடிய மற்ற கருவிகளை இசைப்பதைக் குறிக்கும்.

மேலும், மிகப் பழமையான அகராதியாகிய அல்-ஜவ்ஹரி அவர்களின் அஸ்-ஸிஹாஹ் - ல், மஆஸிஃப் என்பது இசைக் கருவிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அல்-ஆஸிஃப் என்பது, பாடுபவரையும், அஸ்ஃப் என்பது காற்றைக் கொண்டு ஒலி எழுப்பக் கூடியதாய் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்-ஸபீதி என்பவர் தனது, தாஜுல் அரூஸ் மின் ஜவாஹிரில் காமூஸ், என்னும் நூலில் மஆஸிஃப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். முஆஸிஃப் என்பது பொழுது போக்கிற்காகப் பயன்படுத்தக் கூடிய கருவிகள், அக் கருவிகள் மீது அடித்து ஒலி எழுப்பதலும் அல்லது புல்லாங்குழல்  போல ஊதி ஒலி எழுப்புதலும் அல்லது மேளம்  போன்ற இசைக் கருவிகளை இசைத்தலும் அல்லது கைக் கொட்டு போன்றவற்றில் ஒலி எழுப்புதலும் அல்லது இது போன்ற இசைக் கருவிகளை பயன்படுத்துவதும் ஆகும் எனக் குறிப்பிடுகிறார். (Taajul ‘Aroos min Jawaahiril Qamoos vol.6 P.197)

மேலும் பாலைவனத்தில் மரங்களினூடே காற்று புகந்து எழுப்பும் விசில் போன்ற சப்தத்திற்கு, ஜின்களின் சப்தம் அதாவது அரபியில் ஆஸிஃபுல் ஜின் என்பர். ஆந்த ஆஸிஃப் என்ற வார்த்தை மஆஸிஃப், அஸ்ஃப் என்ற வார்த்தையாக இருக்கும் பொழுது, இசைக் கருவிகளை இசைப்பதையும், இசைக் கருவிகளையும் குறிப்பிடுகிறதோ அதே போல, அவ்வாறு எழும் ஒலி அலைகளுக்கு ஆஸிஃபுல் (ஆஸிஃபுல் ஜின் - ஜின்களின் சப்தம்) எனக் குறிப்பிடப்படுகிறது என இப்னுல் அஃதீர் என்பவர் தனது அந்-நிஹாயா ஃபீ கரீபில் ஹதீஸ் என்ற நூலில் குறிப்பிடுகிறார். (vol.3, p.230 of An-Nihaayah)

இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸஹீஹ் புகாரிக்கான விளக்கவுரையாகிய ஃபத்ஹுல் பாரியில், அஸ்ஃப் என்பது பாடுவதைக் குறிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். (Fathhul Baari, vol.10. p.55)

மேற்கண்ட அறிஞர்கள், உலமாப் பெருமக்களின் கூற்றுப்படி மஆஸிஃப் என்ற சொல் கீழ்க்கண்ட அர்த்தங்களைப் பெற்றிருக்கிறது என தெளிவாகிறது.

அதாவது, இசைக்கருவிகள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அதுபோல உள்ள இசைக்கருவிகளிலிருந்து எழும்பக் கூடிய ஓசை அல்லது இசை, இசைக் கருவிகளுடன் இயைந்து பாடுவது என்பன போன்ற அர்த்தங்களைத் தாங்கி நிற்கின்றது என்பதை நாம் உணர முடிகின்றது. இவ்வளவு தெளிவிற்குப் பின்னும் அதற்கு வேரொரு அர்த்தம் புனைவது என்பது, மேற்கண்ட அறிஞர்களின் கருத்தை மறுப்பதுவும், தமக்கு இயைந்த வகையில் பொருள் கொள்ள நினைப்பதையுமே அச் செயல் குறிப்பிடும்.

மேலும், மேற்கண்ட விளக்கங்களின் மூலம் இசையும் அல்லது இசையுடன் இணைந்த பாடலும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆடுத்து, மஆஸிஃப்-டன் இணைந்து வரும் விபச்சாரம், மது, பட்டு அணிதல் போன்றவைகள் இஸ்லாத்தினால் தெளிவாகத் தடையைப் பெற்றிருக்கும் பொழுது, அதனுடன் இணைந்த மஆஸிஃப் (இசை, பாடல்) - ம் தடை செய்யப்பட்டதே என்பதை சொல்லாமலேயே விளங்க முடியும். இதை மறுப்பவர்கள், இஸ்லாத்தில் இசையும் பாடலும் அனுமதிக்கப்பட்டவையே என வாதிப்பவர்கள் மேற்கண்ட தடை செய்யப்பட்ட விபச்சாரம், மது, பட்டு அணிதல்ழூ ஆகியவையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என வாதிடுவார்களா? ஆக, தம் இச்சைக்கு அடி பணிந்து, தடைக்கு எதிராக வாதிடுபவர், இசைக்கான தடையை மட்டும் மாற்ற முனையவில்லை, இஸ்லாத்தினால் தெளிவாகத் தடை செய்யப்பட்டிருக்கும் விபச்சாரம்,மது, பட்டு அணிதல் ஆகியவற்றுக்கும் உள்ள தடையை நீக்க முனைகிறார் என்றே அர்த்தம் கொள்ள வேண்டி வரும். ழூ ஆண்கள் பட்டு அணிதல் ஹராம். பெண்கள் அணிந்து கொள்ளலாம்.

நாம் மேற்கண்ட தலைப்புக்கு, ஸஹீஹ் புகாரி குறிப்பிடும் மேற்கண்ட ஒரு ஹதீஸே சரியான ஆதாரமாகும். ஏனினும் இன்னும் அதை வலுப் பெறச் செய்ய மறற ஹதீஸ் கிரந்தங்களையும் பார்வையிடுவது அவசியமாகின்றது.

3) இப்னு மாஜா :

حدثنا عبد الله بن سعيد، قال : حدثنا معن بن عيسى عن معاويه بن صلح عن حاتم حريث ، عن مالك بن أبي مريم، عن عبدالرحمن بن غنم الأشعرئ عن مالك الأشعرى، قال : قال رسول الله صلى الله عليه وسلم ((ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها ، يعزف على رؤوسهم بالسعازف والمغنيات ، يخسف الله بهم الأرض ، ويجعل منهم القردة والخنازير


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள். ஆதன் உண்மையான பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக் கருவிகளை இசைத்தும், பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். ஆல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து (அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும், பன்றிகளாகவும் மாற்றி விடுவான். (இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)

இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் ஸஹீஹான தரத்தில் அமைந்துள்ளது. மேலும், இதே வார்த்தை அமைப்புடன் பைஹக்கீயிலும், இப்னு அஸாக்கிர் - லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸ் கலை மற்றும் பிக்ஹ் கலை அறிஞரான இப்னுல் கைய்யும் அவர்கள் ஸஹீஹான ஹதீஸ் என குறிப்பிட்டுள்ளார்கள்.

ஷேஷக் முஹம்மது நஸிருத்தீன் அல்-அலபானி அவர்கள் தனது, சில்சிலத்துல் அஹதீத் அஸ்-ஸஹீஹ் பாகம்.1 ஹதீஸ் எண்.90, பக்கம் 136-139 ல் ஸஹீஹான ஹதீஸ் என சான்று வழங்கியுள்ளார்கள். மேலும், காயத்துல் மராம், தக்ரீஜுல் ஹலாலி வல் ஹராம் எனும் அவரது நூலிலும் இது ஸஹீஹான ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

4) முஸ்னத் அஹ்மது :

حدثنا عبد الله ، حدثنا أبي ، حدثنا أبو أحمد ، حدثنا سفيان عن علي بن بذيمة ، حدثني بن حبير قال : سألت ابن عباس عن (أمور... وفيه سئل النبي صلى الله عليه وسلم عن أمور أجاب عليها في آخرالحديث): قال صلى الله عليه وسلم : ((إن الله حرم على أو حرم الخمر والميسر والكوبة ، وكل مسكر حرام)) قال سفيان قلت تعلي بن بذيمة : ماالكوبة؟ قال الطبل (رواه الإمام أحمد فى المسند)

முஸ்னத் அஹ்மது. பாகம்.1. பக்.289., பாகம்.2 பக்கம்.158 மற்றும் 171-172)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் மது (அருந்துவதையும்) சூது (ஆடுவதையும்)| மற்றும் அல்-கூபாவையும் தடை செய்துள்ளான். மேலும் ஒவ்வொரு நச்சுப் பொருளும் தடை செய்யப்பட்டதே. இந்த ஹதீஸை தனக்கு அறிவித்த அலி பின் பதீமா அவர்களிடம் சுஃப்யான் அவர்கள், அல் கூபா என்றால் என்ன என்று வினவிய போது, அல்-கூபா என்றால் மத்தளம் என்று பதில் கூறினார்.

Ahmed’s Musnad vol.1. pp.289 and 350 : vol.2. pp.158.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

إن الله حرم على أمتي الخمر والميسر والمزر والكوبة والقنين، وزادني صلاة الوتر(رواه أحمد في مسند)முஸ்னத் அஹ்மத் பாகம்:2 பக்கம் 165 மற்றும் 167


நிச்சயமாக அல்லாஹ் மதுவையும், சூதாடுவதையும், தானியங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவைகளையும், மத்தளம் அல்லது மேளத்தை யும் (நரம்பினால் ஓசை எழுப்பக் கூடிய) கிதார் போன்றவற்றையும் எனது உம்மத்துக்கு தடை செய்துள்ளான். மேலும், (ஒற்றைப்படைத் தொழுகையான) வித்ரு - என் மீது அதிகப்படியாகக் கடமையாக்கி உள்ளான்.

இமாம் பைஹக்கீ அவர்கள் தனது சுஉபுல் மிஸ்காத்துல் மஸாபீஹிலும் இந்த ஹதீஸ் சரியான ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புhகம்.2 பக்.1276. எண்.4503.

அல் அல்பானி அவர்களுடைய ஸஹீஹுல் ஜாமிஇஸ் சகீர் - ல் சரியான விரிவான ஆதாரங்களுடன் சரிபார்க்கப்பட்டு, நல்ல தரமான ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பகம் 1-2. புக்கம்.106 ஹதீஸ் எண்.1743-1744.

மேலும், அல்-அஹதீஸ் அஸ்ஸஹீஹ் எனும் நூலிலும் சரியான தரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புhகம்:4, பக்.283-285. ஹதீஸ் எண்:1708 மற்றும் பக்கம்422, ஹதீஸ் எண்:1806.

5. அல் ஹாக்கிம் :

ஆல்-ஹாக்கிம் அவர்கள் தனது நூலான அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன், எனும் நூலில் பதிவு செய்துள்ள ஹதீஸ் பின்வருமாறு அமைந்துள்ளது :

நபி (ஸல்) அவர்கள் தனது கையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் எனும் தோழருடன் கோர்த்துக் கொண்டு, நோயுற்று மரண நிலையிலிருக்கும் தன் மகன் இப்றாஹீமைக் காணச் செல்கின்றார்கள். தம் மகனை உயிர் பிரியும் வரை மார்பில் கிடத்தி வைத்திருந்த நபி (ஸல்) அவர்கள், உயிர் பிரிந்ததும் தம் மகனைத் தரையில் கிடத்தி விட்டு, கண்ணில் நீர் சொறிய அழுத விழிகளுடன் இருந்த நபி (ஸல்) அவர்களைப் பார்த்து, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள், யா! ரசூலுல்லாஹ் தாங்களுமா அழுகின்றீர்கள்? என வினவ கீழ்க்கண்டவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலிறுக்கின்றார்கள் :

قال صلى الله عليه وسلم (( إني لم أنه عن البكاء، ولكنى نهنيت عن صوتين أحمقين فاجرين : صوت عند نغمة لهم ولعب، ومزاميرالشيطان، وصوت عند مصيبة، لطم وجوه، وشق حيوب، وهذه ومن لا يرحم ل يرحم)).. .. الحديث (رواه الحاكم باسناد حسن)


Entitled Al-Mustadrak ‘alas saheehayn ; the hadeeth appears on p.40 of vol.4.

நிச்சயமாக நான் அழுவதைத் தடைசெய்யவில்லை. மாறாக,இரண்டு சப்தங்களைத் தடை செய்துள்ளேன். ஆவை வெட்கரமானதும், பாவகரமானதும் ஆகும்.

முதலாவது, ஷைஷத்தானின் கருவிகளை இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு பாடுவதும்| இரண்டாவதாக, துக்கரமான நிகழ்வுகளில் முகத்தில் அறைந்து கொண்டு, ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அழுவதையும் தடை செய்துள்ளேன்.

எனது, இந்த அழுகையானது, மனதில் ஏற்பட்ட துக்கத்தினால் இரக்கம், கருணை காரணமாக வெளிப்பட்டதாகும். ஏவர் மனதில் கருணை இரக்கம் இல்லையோ அவர் இதனை அடைந்து கொள்ள மாட்டார்.

குறிப்பு : இந்த ஹதீஸின் தரம், அறிவிப்பாளர் வரிசை போன்ற மேலும் விபரங்கள் தேவை இருப்பின், அல் அல்பானி அவர்களின் சில்சிலத்துல் அஹதீத் அஸ்-ஸஹீஹ் பாகம்:1, ஹதீஸ் எண்.428 லும் மேலும், அல்-பகாவி அவர்களின், சர்ஹுஸ் ஸுன்னாஹ், பாகம்:5, பக்கம்431 லும் பார்வையிடவும்.

6. அபுபக்கர் அஷஷ்-ஷஷாபிஈ - அர் ருபாயியத்

மேலே அல் ஹாக்கிம் - ல் வ்நத ஹதீஸை உறுதிப்படுத்துமுகமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

عن أنس بن مالك مرفوعا : (صوتان ملعونان، صوت مزمار عند نعمة، وصوت ويل عند مصيبة)) (رواه أبوبكر الشافعي باسند حسن)


அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

காற்றினால் ஒலி எழுப்பக் கூடியதும் (றiனெ)| புல்லாங்குழல் (ஆணைஅயயச) போன்றும் உள்ள இரு இசைக்கருவிகளை சந்தோசமான, உற்சாகமான நேரத்திலும், மற்றும் துக்ககரமான நேரத்திலும் இசைப்பதை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

அல் பஸ்ஸார் அவர்களின் அல் முஸ்னது எனும் நூலில் சிறிய வார்த்தை மாற்றங்களுடன் மேலே உள்ள ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல் ஹாபிழ் நூருத்தீன் அல்-ஹைதமீ அவர்களின் மஜ்மாஅ அஸ்-ஸாவாஇத் பாகம்:3 பக்கம் 13 ல் சரியான அறிவிப்பாளர் தொடருடன் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதுவரை இசைக்கு எதிராக நாம் கண்டு வந்த குர்ஆனிய மற்றும் சுன்னா (ஹதீஸ்) வின் ஆதாரங்களும் மிகத் தெளிவான முறையில் தடையைக் கொண்டு அமைந்துள்ளன எனால்.

கடைசியாக உள்ள மூன்று ஹதீஸுகளிலும் கையாளப்பட்ட இசைக்கருவிகளாவன :

இசைக் கருவிகள் (பொதுவாக அனைத்து இசை எழுப்பக் கூடிய கருவிகளும்.
புகாரி, இப்னு மாஜா
المعازف

மத்தளம்
அஹ்மது
والكوبة

கிதார் (நரம்பு கொண்டு இசைக்கும் கருவிகள்.

பொதுவாக அரபு நாடுகளில் பயன்படுத்தப்படும் கிதார் போன்ற ஒரு வகை இசைக்கருவி)
அஹ்மது
والقنين

காற்று கொண்டு ஊதி இசைக்கும் கருவிகள் - ஐஷஷத்தானின் ஊதுகுழல்)
அல் ஹாக்கிம்
ومزاميرالشيطان

காற்று கொண்டு ஊதி இசைக்கும் கருவிகள் - ஷைஷத்தானின் ஊதுகுழல்)
அர் ருபாயியத்
مزمار

மேலே தொகுத்துத் தரப்பட்டுள்ள வார்த்தைகள் யாவும் மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸுகளில் கையாளப்பட்டவைகளாகும். இன்றுள்ள இசைக் கருவிகள் அனைத்தும் மேலே உள்ள தன்மையில் ஏதாவது ஒன்றைப் பெற்றுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றோம். மேலும், நாம் சுட்டிக் காட்டியுள்ள ஹதீஸின் தரங்களும் நல்ல தரமானவையாகவே உள்ளன எனும் போது, நிச்சயமாக இறைவன்! இந்த சமுதாயத்தின் மீது இசையையும் அதனுடன் பாடப்படும் பாடலையும் தடை செய்தே வைத்திருக்கின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதற்கு மேல் மேலதிக விளக்கம் தேவை இல்லை என்பது உண்மையான முஃமினுக்கு உள்ள அடையாளம் என்பதை கீழ்வரும் குர்ஆனிய வசனம் குறிப்பிட்டுக் கூறி நிற்கிறது.

வருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.) (காஃப்:51:37)
 

 

முஸ்லிம்

'இது கூடும்' 'இது கூடாது' என்று நாமாக சுயமாக சொல்வதற்கு எந்த அதிகாரத்தையும் இறைவன் எந்த மனிதருக்கும் கொடுக்கவில்லை. ஒன்றை நாம் வெறுப்பதால் அது ஹராமாகவோ ஒன்றை நாம் விரும்புவதால் அது ஹலாலாகவோ ஆகி விடாது. நம்முடைய விருப்பு வெறுப்பைக் கடந்து இதற்கான இஸ்லாமிய வழிகாட்டல் என்னவென்று அறிவதே அறிவுடமையும், இறைவனுக்கு பிடித்தமான செயலுமாகும்.

வட்டிப் போன்று, விபச்சாரம் போன்று, போதையை உட்கொள்ளுதல் போன்று மாற்றுக்கருத்து இல்லாமல் தடுக்கப்பட்ட நிலையில் இசையை வைத்துப் பார்ப்பதற்கு ஆதாரங்கள் எதுவுமில்லை. (இசை குறித்து வரும் ஹதீஸ்கள் கூட பலவீனமானவையாக இருக்கின்றன. அதை பிறகு விரிவாக விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்)

வேற்று மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட தமிழ் இஸ்லாமின் இசைப்பற்றிய கட்டுரையையே ஒன்றுக்கு பலமுறை படியுங்கள். இசை ஹராம் என்று சொல்லுவதற்கான ஆதாரங்களை தெளிவாக எடுத்துக்காட்ட முடியவில்லை. மூலக்கட்டுரை இப்படியும் அப்படியுமாக சமாளித்துதான் தன் கருத்தை நிலைநாட்டியுள்ளது.

சினிமா பாடல்கள் கேட்கலாமா...?
சினிமாப்பாடல்களில் அர்த்தமுள்ளப் பாடல்களும் உண்டு, சினிமாவைத் தவிர்த்த கிராமிய கூத்து, கிராமியப்பாடல்கள், இஸ்லாமிய?ப் பாடல்கள் போன்றவற்றில் மோசமானவையும் உண்டு. அர்த்தத்திற்காக பாடல்கள் ரசிக்கப்பட்டால் பாடல்களின் அர்த்தத்தைப் பொருத்துதான் கூடும் கூடாது என்று சொல்ல முடியும். இசைக்காக பாடல் ரசிக்கப்படுகின்ற நிலை வந்தால் அது வெறும் கேலி பொழுது போக்கு, நேரத்தை வீணடித்தல் போன்ற காரியங்களில் நம்மை இழுத்துச் செல்லும் என்பதால் தவிர்த்து விட வேண்டும்.

 

Name: abdul azeez
email: azeez1729@....
Location: abudhabi habshan
Subject: Criticism
Message:

Salam for all of you... sagodarar ansari avarkal pala hadiskal anuppi irundar intha thalathil. paarthen . aduku muslim endra katturai ansari katturai ippadi appadi umaga than iruku endru eludivulladu arivipaalar varisail [HASAM IBN AMMAR] ikkum imam [BUKARI] ikkum thodarbu arundu vulladu endru kuripitulladai [SHEIK IBN SALAH] tanadu nulil inda hadis adaarathudan oru hadis endenda tagudigalukum nibandanaikalukum iruka vendumo attanai tagutikalukum inda hadis porundi ulladu endra hadisai etrukolladaa muslim katturai inda onnu podume en appuram pidivadam erkanave inda talatil re_heart092@yahoo.co.in enbavar hadis taram pattri vilakkum noolkal tamilil ullanavaa endru kettullar aduku taram alasum noolkal arabiyil niraiya irukindrana tamilil velivandada teriyavillai ippadiyum appadiyum edirkalathil sila nookal vandalum adanal enda pirayojanamum erpadadu endru eludiyulladu inda talam. adanal naan sagodaran endra murail echarikkiren isai patri vivadikkiradai thavirkavum illai endral re_heart sagodarar kettadu pol tamilil taram arivipalar nool veli varum varai 10 varusam aairakkanakana muslimgal hadisai pin pattruvadai tavirtuviduvargal appuram idan nanmaikal ellam ungalukkuthan
abdul azeez

 

 

 

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை