www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்

ரு குடும்பத்திற்கு ரு டு போதும்.

ஆ.ஜுபைதா

 

நபி ஸல் காலத்தில் ஒருவர் தன் சார்பகவும் தன் குடும்பத்தார் சார்பாகவும் ஒரு ஆட்டை மட்டும் குர்பானி கொடுப்பார் என அபூ அய்யூப் (ரலி) கூறுகிறார்கள் .திர்மதி .இப்னுமாஜா.

அபூ அய்யூபிடம் நபிஸல் காலத்து குர்பானி எப்படி இருந்தது என்று நான் கேட்டேன் . அதற்கு அவர்கள் தமக்காகவும். தம் குடும்பத்திற்காகவும் ஒரு ஆட்டை மட்டும் குர்பானி கொடுப்பார்கள் அதை தாமும் உண்டு பிறருக்கும் உண்ண கொடுப்பார்கள் இதுவே வழக்கமாக இருந்தது எனக் கூறினார்கள்.
(இப்னுயாஸர்-முஆத்தா-திர்மிதி)

யார் அறுப்பது?

குர்பானி கொடுப்பதற்காக, ஆட்டை அறுப்பதற்காக கூலிக்கு ஆள் பிடித்து வருவது சுன்னத்தல்ல. எவர் குர்பானிகொடுக்கிறாரோ அவரே அறுக்க வேண்டும் அதுதான் சுன்னத்.

நபி ஸல் குர்பானி கொடுக்கும் போது 'பிஸ்மில்லாஹிவல்லாஹு அக்பர்' என்று கூறி தன் கையாலேயே அறுத்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி.
 

பெண்களும் அறுக்கலாம்

மரணத்தை நெறுங்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டை ஒரு பெண்மணி கூர்மையான கற்கலால் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்து விட்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் கூறியதும் அதை அங்கீகரித்தார்கள். (புகாரி)
 

குர்பானி கொடுப்போர் செய்யக்கூடாதவை.


உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க நினைத்தால் துல் ஹஜ் பிறை கண்டது முதல் அவர் தமது முடிகளையோ நகங்களையோ களைய வேண்டாம் என்பது நபி மொழி. (உம்மு ஸலமா (ரலி) முஸ்லிம், அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்).

குர்பானி பிராணி

ஆடு மாடு. ஒட்டகத்தைத் தவிர வேறு எந்த மிருகத்தையும் குர்பானிக்காக பயன் படுத்தக் கூடாது.
மாடு, .அல்லது ஒட்டகத்தை குர்பானி கொடுக்கும் போது ஏழு பேர் கூட்டு சேர்ந்து ஒன்றாக குர்பானி கொடுக்கலாம், இவ்வாறு கூட்டு சேர்ந்து கொள்ளுமாறு நபி(ஸல்) கூறியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்).

ஆட்டிற்கு இச்சலுகை இல்லை.
 

குர்பானிக்கு பொருத்தமில்லாத மிருகம்.

குர்பானி கொடுக்கும் மிருகத்திற்கு குறைப்பாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். காதுகள் அறுபட்டவை, காதுகள் இல்லாதவை. எலும்பு முறிந்தவை, தானாக நடக்கமுடியாதவை. வெளிப்படையாகத் தெரியும் நொண்டி. நன்றாக, தெரியக்கூடிய மாறுகண், கொம்புகள் இல்லாதவை இக்குறைப்பாடு உள்ள மிருகங்கள் தவிர்க்கப் பட வேண்டும். (அஹ்மத். திர்மதி இப்னுமாஜா நஸயீ. அபூதாவூத் ஆகிய நூல்களில் இந்த விபரம் கிடைக்கின்றன).
 

குர்பானி மிருகத்தை நாமே சிறப்பாக பராமரிக்கலாம்.

நாங்களும் ஏனைய முஸ்லிம்களும் குர்பானி மிருகத்தை கொழுக்க செய்வோம் என்று அபூ உமாபா (ரலி)கூறிகிறார்கள்.
 

ஹஜ் தொழுகைக்கு பின்பே அறுக்க வேண்டும்.

தொழுகைக்கு முன்பே பிராணி அறுக்கப்பட்டதை நபி (ஸல்) பார்த்தார்கள். உடனே யார் தொழுகைக்கு முன்பே அறுத்தாரோ அவர் வேறொரு மிருகத்தை அறுக்க வேண்டும் என்று கூறினார்கள். தொழகைக்கு பிறகே அறுக்க வேண்டும் அது தான் முறை என்றும் சொன்னார்கள். ( ஜீன்துப் ரலி) புகாரி, முஸ்லிம்).
 

குர்பானி இறைச்சியை எல்லோரும் சாப்பிடலாம்.

குர்பானி இறைச்சியை நீங்களும் சாப்பிடுங்கள், பிறகு சாப்பிட சேமித்தும் வைத்து கொள்ளுங்கள், பிறருக்கு தர்மமும் செய்யுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்).

நபி (ஸல்) வரையறுத்த இக்கட்டளைகளைப் பேணி குர்பானி கொடுப்போமாக.
 

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை