www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்

மேற்குலகின் இன்றைய நிலைப்பாடுகள்..

முத்துப்பேட்டை. அபூ அஃப்ரின்

 
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் மற்றும் அந்த இரு நாடுகளிலும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய சிந்தனையுடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்கள் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள அனாபோலிஸில் 27.11.07 அன்று அமைதி பேச்சு வார்த்தையினை மேற்குறிப்பிட்ட இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தி இருந்தார்.

இரு நாடுகளிடையே ஒரு அமைதியினை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் பிரதமர் இஹத் ஆல்பர்ட், பாலஸ்தீன பிரதமர் முஹமுத் அப்பாஸ் இருவரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு அமெரிக்க அதிபரின் முன்பாக கைக்குலுக்கிக்கொண்டு சிரித்த முகத்துடன் பத்திரிகையாளருக்கு போஸ் கொடுத்தார்கள் ஒழிய அங்கு ஒன்றும் எந்த விதமான அமைதி தீர்வும் ஏற்பட வில்லை. ஆகையால் மீண்டும் டிசம்பர் 12 ம் தேதி பேச்சு வார்த்தை துவங்கும் என்று மட்டும் கருத்து கூறினார்கள்.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இதன் மூலம் ஒரு அமைதி தீர்வு ஏற்படுத்த இதுவே சரியான தருணம் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்து இருந்தார். அன்று நடைபெற்ற இந்தகூட்டமானது சாதாரண பேச்சு வார்த்தை தான் ஆனால் அதில் எந்த விதமான சரியான முடிவு ஏற்படாது என்பது ஊடகவியலாரின் ஆணித்தரமான கருத்தாக இருந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பு வரை இந்தப் பேச்சுக்கள் எவ்வாறு செல்ல வேண்டும் எவ்வாறு பேச வேண்டும் என்பது பற்றி ஒரு சிறிய கருத்து கூட பாலஸ்தீன தரப்பினருக்கிடையே மற்றும் இஸ்ரேலிய தரப்பினருக்கிடையே ஒரு இணக்கம் மற்றும் கருத்து பரிமாற்றம் செய்யப்பட வில்லை என்பதும் செய்தியாளர்களின் கருத்தாகும்.

இந்த பேச்சு வார்த்தையானது, அமைதியை தரும் என்பது அமெரிக்கா பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய நாட்டின் அதிபர்களின் கருத்தாக ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதன் மூலமாக இரு நாடுகளிடையே எத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்பது பற்றி பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தெரியும்.

ஆகையால் இந்த பேச்சு வார்த்தைக்கு பாலஸ்தீன நாட்டில் பல எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள். இங்கு மட்டுமில்லை, ஈரான் நாட்டிலும், காஸா பகுதிகளிலும், மற்றும் ஹாமாஸ் தலைவர்களும் பல எதிர்ப்பினை கிளம்பி உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையானது ஒரு கபட நாடகம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதன் மூலமாக எதனை சாதிக்க நினைக்கிறது அமெரிக்க என்பதும் கேள்விக்குறி என்று சொல்ல முடியாது. அமெரிக்காவின் குறியே மத்திய கிழக்கு நாடுகள் தான். எப்படியாவது எங்கையாவது ஏதாவது பிரச்சனைகளை கிளப்பி அதில் குளிர் காய வேண்டும் என்பது குள்ள நரியின் செயலாக தான் உள்ளது அமெரிக்காவின் இன்றைய போக்கு என்பது நாம் தெரிந்த உண்மை தான்.

அத்துடன், மேற்குக் கரைப்பகுதியிலும் பல எதிர்ப்புகள் நடந்தன. இங்கு நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பேர்கள் கலந்து கொண்டனர். பாலஸ்தீன நாட்டு பொது மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஹிஷாம் பாராதி என்ற 36 வயதுடையர் அந்த இடத்தில் இறந்து உள்ளார். மற்றும் 35 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இதே போன்று, காஸா பகுதியிலும் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அந்த பகுதியில் பலமாக இருக்கும் ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியாவை இந்த பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்பதும் இங்குள்ள பொது மக்களின் கருத்தாகும். இந்த பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்டு எந்த விதமான ஒப்பந்ததிலும் கையெழுத்து மற்றும் எந்த விதமான முடிவும் எடுக்க பாலஸ்தீன அதிபருக்கு உரிமையில்லை என்று ஹமாஸ் தலைவர்கள் கூறினார்கள்.

ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான, முஹமத் ஜாஹார் அவர்கள் குறிப்பிடுகையில், நாங்கள் பாலஸ்தீனர்கள் எங்கள் நாட்டின் பெயரினை குறிப்பிட்டு யாரும் எந்த ஒப்பந்தமும் செய்யக்கூடாது, எங்கள் நாட்டின் பெயருக்கு யாரும் அவமானம் தேடித்தரக்கூடாது என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

எந்த நாட்டிற்கும், பாலஸ்தீனர்கள் ஒரு சிறிய இடம் கூட கொடுக்க மாட்டோம். எங்களின் வியர்வையையும் மற்றும் இரத்ததினையும் நாங்கள் கொடுக்க தயார், எந்த விதமான போராட்டத்தினை சந்திக்க நாங்கள் தயார் என்று பாலஸ்தீன நாட்டின் போராட்டக்குழுவின் தலைவரான முஹம்மத் அல் ஹிந்தி அவர்களின் கூற்றாகும்.

இது போல் பல போராட்டங்கள், பல பிரச்சனைகளுக்கிடையே தான் அனாபோலிஸ் பேச்சு வார்த்தை உள்ளது. இந்த பேச்சு வார்த்தையினை மேற்கொள் காட்டி தற்போது அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளிடையே பிரிவினைகளை கொண்டு வர பார்க்கிறது என்பது நடுநிலையாளர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும்.

அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது, அந்த தேர்தல் நேர்மையாகவும் நியாயமாக நடக்கிறதா..? அல்லது அநியாயமாகவும் மற்றும் நேர்மை தவறியும் நடக்கப்போகிறதா..? என்பதினை நான் கவனிக்க வேண்டும் மற்றும் சென்ற முறை நான் அதாவது 23.09.2007 அமெரிக்கா வந்த போது என்னை 9-11 இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தினை காண அனுமதி அளிக்கவில்லை இந்த முறையேனும் எனக்கு அனுமதி தர வேண்டும் என்பது பற்றி பல கருத்துகள் அடங்கி 18 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றினை அமெரிக்க அதிபருக்கு ஈரான் நாட்டு அதிபர் அனுப்பி வைத்துள்ளார். மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்து உள்ளார்.. அமெரிக்கா நாட்டு மக்களே.. நீங்கள் சரியான ஒரு நிர்வாகத்தினை உங்களுக்காக தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்றும் கூறி உள்ளார்.

சென்ற முறை ஈரான் அதிபர் அமெரிக்க சென்ற போது பல எதிரிப்புகளை மீறியும் அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வியாளர்கள் மற்றும் மாணாக்கர்களிடையே சொற்பொழிவாற்றினர். இந்த நிகழ்ச்சியானது 24.9.07 அன்று அங்கு நடைபெற்றது. அங்கு 700 மாணாக்கர்கள் உள் அரங்கினுள் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் வெளியே பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அவரின் உரையினை தொலைக்காட்சியின் மூலமாக பார்த்தார்கள். மாணாக்கர்கள் மற்றும் கல்வியாளர்கள் அவரிடம் கேட்ட பல கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலை கொடுத்து இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதே போல்.. அமெரிக்கா அதிபருக்கும் ஒரு அழைப்பினை ஈரான் அதிபர் விடுத்துள்ளார். ஈரானின் உள்ள ஃபிர்தௌஸியா பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள விழா ஒன்றில் உரை நிகழ்த்த தாங்கள் ஈரான் நாட்டிற்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினை விடுத்து இருந்தார். ஆனால் இது நாள் அமெரிக்க அதிபரிடம் இருந்து எந்த விதமான பதிலும் ஈரான் அதிபருக்கு கிடைக்கவில்லை.

இஸ்லாத்திற்கு ஏதிராக பல பிரச்சனைகளை நாள்தோறும் கொண்டு வரும் அமெரிக்காவின் நிலைகளை நாம் எழுதும் போது பக்கங்கள் போதாது. ஏனென்றால் தினந்தோறும் புதிய புதிய பிரச்சனைகள்.. என்ன செய்ய முடியும்.. அல்லாஹ்வின் கிருபையால் என்றாவது ஒரு அமைதி இந்த உலகத்திற்கு கிடைக்க நாம் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்வோமாக.. அல்லாஹ் நாடினால்.. எல்லாம் நன்மையே நடக்கும்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் பணி புரியும் 14 இமாம்கள் கொண்ட குழுவானது, சமீபத்தில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் வந்தனர். துபாயில் ஸையத் இஸ்லாமிக் கலாச்சார மையத்தில் 20.11.07 புதன் அன்று நடைபெற்ற ஆறு வாரங்கள் நடைபெற்ற நல்லொழுக்க பயிற்சி முகாமில் அவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் இங்குள்ள பல இமாம்களும் கலந்துக் கொண்டனர்.

கலாச்சாரம், பண்பாடு, மதம், கல்வி, மருத்துவம், மக்களின் வாழ்க்கை நெறிமுறைகள், ஒழுக்கக்கட்டுப்பாடுகள் போன்ற பலவற்றினை பற்றி இந்த முகாமில் விவாதித்தார்கள். இதன் மூலமாக பயிற்சியினை மேற்கொண்ட அமெரிக்க நாட்டினை சார்ந்த இமாம்கள் அனைவரையும் அல்லாஹ்வின் கிருபையால் உம்ரா சென்று வர வசதியினை துபாய் இஸ்லாமிக் கலாச்சார மையமானது ஏற்பாடினை அவர்களுக்கு செய்து இருந்தது.

நன்றி: Khaleej Times

அரபுலக செய்தி ஆங்கில செய்திப்பத்திரிகையின் தமிழாக்கம்.
 

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை