|
பெருமைக்குரிய விஷயங்கள்...!? |
|
மு.ரஃபிக் ஜகரிய்யா - ஃபுஜைரா, அமீரகம் |
|
உலகின் பெரும்
பணக்காரர்கள் பட்டியலானது சமீபத்தில்
ஊடகத்துறையானது வெளியீட்டு இருந்தது.
அதில் முதல் வரிசையில் இந்தியாவை சார்ந்த
ரிலையன்ஸ் தொழிலதிபர் திரு. முகேஷ்
அம்பானி அவர்கள் உள்ளார். அவரின் சொத்து
மதிப்பு டாலர் கணக்கின் படி 63.2
பில்லியன், இரண்டாவது வரிசையில் மெக்ஸிகன்
நாட்டை சார்ந்த கார்லொஸ் ஸ்லிம் ஹேலு
என்பவர் இருக்கிறார். அவரின் சொத்து
கணக்கு 62.2993 பில்லியன் டாலர்.
மூன்றாவது இடத்தில் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தினை சார்ந்த வில்லியம் பில்
கேட்ஸ் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு
62.29 பில்லியன் டாலர் மதிப்பு. நான்காவது
இடத்தில் வாரான் ஃபாப்பட் என்பவர்
இருக்கிறார். இவரின் சொத்தானது 55.9
பில்லியன் டாலர் மதிப்பு. ஐந்தாவது
இடத்தில் இந்தியாவை சார்ந்த திரு. லட்சுமி
மிடல் அவர்கள் உள்ளார். இவரின் சொத்து
மதிப்பானது 50.9
மில்லியன் டாலராகும்.
சென்ற 2.11.07 அன்று மும்பை விமான
நிலையத்தில் ஒரு விமான வந்து இறங்கியது.
அந்த விமானத்தின் உள்ளே நவீன வசதி கொண்ட
ஆடம்பரமான அறைகளும், படுக்கை வசதி கொண்ட
அறைகளும், விமானத்திற்குள் தொழிலதிபர்களை
சந்தித்து உரையாடல் நிகழ்த்துவதற்கு ஏற்ற
வசதிக்கொண்ட கான்பரஸ் வசதியும் உள்ளன.
மற்றும் பணக்காரர் குடிப்பதற்கு ஏற்ற பல
வசதிகளைக்கொண்ட குடி பார்களும் அதில்
உள்ளன. இத்தனை வசதிக்கொண்ட விமானத்தின்
மதிப்பானது இந்திய மதிப்புப்படி 2.45
பில்லியனாகும். இந்த விமானத்தின்
சொந்தக்காரர் வேற யாரும் அல்ல.. நம்முடைய
உலக முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி தான்.
முதல் மற்றும் ஐந்தாவது இடத்தில்
இந்தியாவை சார்ந்தவர்கள் உலக
செல்வந்தர்களாக இருக்கிறார்கள் என்பது
நமக்கு ஒரு பெருமை தான். இது போல் உள்ள
செய்திகளை கேட்கும் போது நாம் நம்முடைய
சட்டை காலரை தூக்கிக்கொள்ளலாம். ஆனால் அதே
இந்தியாவில் பல தொழிலாளர்கள் குழந்தைகளாக
இருக்கிறார்கள் என்பதினை பார்க்கும்
போது... என்ன செய்வது..?
சில நாள்களுக்கு முன்பாக, மும்பையில் நகை
தொழில் நுட்பம் செய்யும் தொழிற்சாலைகளில்
வேலை செய்த 49 சிறார்கள் காவல்
துறையினரால் தாராவி என்ற பகுதியிலிருந்து
மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பீகார்,
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலத்தை
சார்ந்தவர் ஆவார் என்று அங்குள்ள காவல்
துறையினர் தெரிவித்தனர். ஒரு நாளைக்கு
குறைந்தது 12 முதல் 14 மணி நேரங்கள் வேரை
செய்தால் அவர்களுக்கு கிடைக்கும்
கூலியானது வேறும் 20 ரூபாய் அல்லது 30
ரூபாயாக தான் இருக்கும். மும்பையில்
குழந்தை தொழிலாளர்களின் வளர்ச்சியானது
அதிகரித்து விட்டது. 2005 ஆம் ஆண்டில்
மட்டும் மும்பையில் 33,500 பேர்கள்
இருந்தனர்.
வட மாநிலங்களில் பல சிறார்கள்
பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு
செல்கிறார்கள். ஆனால் அங்கு, அவர்களுக்கு
ஏற்படும் அன்னல்களும், இன்னல்களும் சொல்லி
மாளாது. பண முத(லாளி)லைகள், குழந்தைகளை
அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு அவர்கள்
என்ன வேலை சொல்கிறார்களோ அதனை திறமையாய
செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை
கொத்தடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள்.
வேலையில் சிறுதும் தவறு ஏற்பட்டால்
அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பலவாறாக
இருக்கும்.
குடும்பத்தில் ஏற்படும் வறுமை, பசி,
பட்டினியால் பலியாகுவது என்னவோ இத்தகைய
சிறார்கள் தான். வீட்டில் சாப்பிட ஒன்றும்
இருக்காத பட்சத்தில், தன்னுடைய பிள்ளைகளை
மற்றவர்களிடம் குறைந்த விலைக்கு விற்கும்
பல பெற்றோர்கள் இன்னும் வட மாநிலங்களில்
இருக்கிறார்கள். நம்ம பிள்ளை தானே.. அங்கு
நல்ல இருப்பான்.. என்று பெற்றோர்கள்
எண்ணுவார்கள். ஆனால் அங்கு நடக்கும் கதையே
வேற மாதிரியாக தான் இருக்கும். கையில்
சூடும், இரண்டு நாள் பட்டினியும், மெலிந்த
உடலும், கிழிந்த ஆடையுமாக தான் அவர்கள்
இருப்பார்கள்.
கட்டிடப்பணி செய்வது, தோட்ட வேலை செய்வது,
கல் குவாரிகளில் கல் உடைப்பது, மூட்டை
இழுப்பது, மற்றும் இது போல் உள்ள கடினமான
வேலைகளுக்கு இவர்கள் பயன்
படுத்துகிறார்கள். ஏனெனில் பெரிய ஆளாக
இருந்தால் அதிகமான தினக்கூலி கொடுக்க
வேண்டும். சிறார்களாக இருந்தால் ஐந்து
ரூபாயோ அல்லது பத்து ரூபாயோ போதுமானது
அவர்களுக்கு.
இன்னும் சில மாநிலங்களில் சாராயக்கடைகளில்
மற்றும் சால்னா கடைகளில் முறுக்கு,
ஆம்லெட் விற்கவும் சிறார்கள் பயன்
படுத்தப்படுகிறார்கள். அங்கு குடிக்க
வரும் வாடிக்கையாளர்களின் ஏஞ்சுக்கும்
பேச்சுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது.
குடித்து விட்டு அவர்கள் எடுக்கும்
வாந்தியும் அவர்கள் தான் துடைக்க வேண்டும்
என்ற கட்டாயத்தில் அவர்கள் இருப்பார்கள்.
சில நேரங்களில் அவர்களின் மீது வாந்தி
எடுப்பார்கள்.
சிறார்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு
மாநிலத்திற்கு கடத்தும் தொழிலும்
இந்தியாவில் அதிகரித்து விட்டது.
சிறார்களை கடத்தும் தொழில் செய்வதற்கு
தனியாக ஏஜண்ட் உள்ளார்கள் அந்த அந்த
மாநிலங்களில். பாஷை தெரியாத மாநிலத்தில்
அவர்களை கொண்டு விட்டு விடுவார்கள்.
அங்கேயும் ஒரு ஏஜண்ட் இருப்பான். மொழி
தெரியாத மாநிலத்தில் அவர்களுக்கு ஏற்படும்
பிரச்சனைகள் பல உண்டு. அவர்கள் ஒன்று
சொல்வார்கள்.. சிறார்கள் ஒன்று
சொல்வார்கள்.. ஒன்றும் புரியாது. ஏஜண்ட்
அடிப்பான்.. என்ன செய்வது.. சில
ஏஜண்ட்டுகள் மனித தன்மை இல்லாமல்
சிறார்களை பிச்சையெடுப்பதற்கு விட்டு
விடுவான். ஆம்.. சிறார்களின் நாக்கினை
அறுத்து விடுவான்.. அல்லது ஒரு கையையோ
அல்லது காலை ஊனமாக்கி விடுவான்.. ஏனெனில்
பார்ப்பவர்கள் பரிதாதம்
பட்டு அதிகமான பிச்சை போடுவார்கள் தானே..
சிறுவர்கள் எப்படி பிச்சையெடுக்கிறார்கள்
என்பதினை அவர்களுக்கு தெரியாமல் அவர்களை
நோட்டம் விடும் ஒரு சில ஏஜெண்டுகளுக்கு
அவர்களுக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டும்
மறைந்துக்கொண்டும் இருப்பார்கள்.
சாயந்திரம் கலக்ஷன் முடிந்து வரும் போது
.. யாண்டா.. இன்னைக்கு கம்மி.. எங்கே
போனே.. என்ன வாங்கி சாப்பிட்டாய்.. உன்
நாக்கே தான் வேட்டி விட்டேனே.. எப்படி
உனக்கு ருசி தெரியுது.. போடா நாயே..
பேயே.. என்று பல பேச்சுகள்.. என்ன
செய்வார்கள்.. பல அடிகள் மேன் மேலும்.
பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கோவில்,
குளங்களில் மற்றும் பொது மக்கள் கூடும்
இடங்களில் இத்தகைய சிறார்கள் இருப்பதை
நாம் பார்த்து இருக்கின்றோம். அய்யோ..
பரிதாபம் என்று தான் நமக்கு தோன்றும்.
ஆனால் அவர்களின் கதையினை நாம் கேள்வி
பட்டால் நமக்கே வேதனையாக தான் இருக்கும்.
சென்ற வாரம், டில்லியில் ஆயத்த ஆடைகள்
செய்யும் தொழில் சாலைகளில் இருந்து,
சட்டத்திற்கு விரோதமாக பணியில் இருந்த 14
குழந்தை தொழிலாளர்கள், திரு. புவான் ரிபு
(குழந்தை தொழிலாளர் மீட்பு பணியினை
சார்ந்தவர் மற்றும் வக்கீலாகவும் உள்ளவர்)
என்பவரால் மீட்கப்பட்டனர். சிறார்கள் இந்த
தொழில் சாலைகளில் ஒரு நாளைக்கு 15 மணி
நேரம் பணி புரிய வேண்டும் என்ற
கட்டாயத்தில் இருந்து உள்ளனர். மற்றும்
அவர்களுக்கு பேசப்பட்ட சம்பளமும் சரியான
முறையில் கொடுக்கப்பட வில்லை என்பதும்
அங்கிருந்து வந்த சிறார்களின்
கருத்தாகும். என்னை கடத்தி வந்து இங்கு
விட்டு விட்டார்கள் என்றும் பல சிறார்கள்
அவரிடம் சொன்னார்கள்.
குழந்தைகள் கடத்தல் தொழில் இந்தியாவில்
மட்டுமல்ல, சூடான் நாட்டிலும் நடந்து
உள்ளது. 103 குழந்தைகளை கடத்திக்கொண்டு
போய் மற்ற நாடுகளுக்கு சட்ட விரோதமாக
விற்பனை செய்த, 9 பிரான்ஸ் நாட்டினை
சார்ந்தவர்களும், 7 ஸ்பானிஷ் நாட்டினை
சார்ந்த விமானப்பணியாட்களும், இரண்டு கனடா
நாட்டை சார்ந்தவர்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
சூடான் நாட்டில் உள் நாட்டு போரால்
பாதிக்கப்பட்ட மேற்கு பகுதியான டார்பூர்
என்ற இடத்தில் இருந்து பல குழந்தைகளை
இவர்கள் கடத்தி உள்ளனர். ஆனால் அவர்களிடம்
விசாரணை செய்யும் போது நாங்கள் கடத்த
வில்லை, அவர்களின் பெற்றோர்களிடம் குறைந்த
விலைக்கு வாங்கி வந்தோம் என்றும்
சொன்னார்கள். இத்தகைய திருடர்களுக்கெதிராக
அங்குள்ள மக்கள் தெருவில் இறங்கி
போராட்டங்களை செய்தனர்.
மியான்மர் நாட்டில் உள்ள இராணுவத்தில்
குறைந்த வயதுடைய பல சிறார்களை அமர்த்தி
உள்ளனர். இந்த தகவலை மனித உரிமை பார்வை
கழகமானது
(Human Rights Watch)
31.10.2007
அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.
பொது இடங்களில் சுற்றி திரியும் சிறார்களை
கட்டாயமாக பிடித்து இராணுவத்தில்
சேர்க்கிறது மியான்மர் அரசாங்கம். 2004
ஆம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்ட பல
சிறார்களை இராணுவத்திற்காக எடுத்து
உள்ளனர். இராணுவத்தில் சேர விரும்பம்
இல்லாத பிள்ளைகளை அடித்து
துன்புறுத்துகிறார்கள். எனக்கு வயது 16
தான் என்று சொன்னால், அவனை
கட்டாயப்படுத்தி 18 வயது என்று சொல்ல
வைக்கிறார்கள் அங்குள்ள அதிகாரிகள். வலு
கட்டாயமாக இராணுவத்தில் சேர்வதற்கு இராணுவ
சேர்க்கை படிவத்தில் கையெழுத்து
வாங்குகிறார்கள் சிறார்களிடம்.
இந்தியாவை பொறுத்த வரையில் 13 மில்லியன்
குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்
என்றும், வருங்காலங்களில் அந்த
வளர்ச்சியானது 60 மில்லியனை எட்டும்.
இந்தியாவின் வருமான வளர்ச்சியின் 20
பங்கானது 14 வயதிற்குட்பட்ட சிறார்களை
நம்பி தான் இருக்கிறது என்ற செய்தியும்
தற்போது வெளியாகி உள்ளது.
பல பெற்றோர்கள் தம்முடைய பிள்ளைகளின்
கல்வி வளர்ச்சிக்கு அவர்களே ஒரு தடையாக
இருக்கிறார்கள். நான் சம்பாதிக்கும் பணம்
வீட்டு தேவைக்கே பத்த வில்லை. நீ படிச்சு
என்ன பண்ண போகிறாய்.. போய் எங்கையாவது
பிச்சையெடு.. என்று சொல்லும்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோர்கள்
பலர் இந்தியாவில் உள்ளார்கள்.
சென்ற வாரம் பீகாரில் நடந்த சம்பவம்
ஒன்று, தான் படிக்கும் பள்ளிக்கூடம்
வீட்டிலிருந்து கொஞ்சம் துரம் உள்ளதால்
சைக்கிள் வேண்டும் என்று மகள் ஒருவள்
தன்னுடைய தாயிடம் கேட்டு உள்ளாள். ஆனால்
வாங்கி கொடுக்க வசதி இல்லாத அந்த
தாயானவாள், சப்பாத்தி கட்டையால் தன்னுடைய
மகளில் தலையில் அடித்து உள்ளார். உடனே
அந்த சிறுமியின் உயிர்
பிரித்து விட்டது. அதனை மறைப்பதற்கு அந்த
தாயானவள் முயற்சி எடுத்து உள்ளார். எம்..
மகள் வயத்து வலி தாங்க முடியாமல் தற்கொலை
செய்து கொண்டாள் என்று அங்குள்ள
கிராமத்தலைவரிடம் சொல்லி உள்ளார். ஆனால்
அதனை கேட்காத கிராமத்தலைவர் காவல்
துறையிடம் சொல்லி உள்ளார். காவல்
துறையானது அந்த தாயினை கைது செய்து
சிறையில் அடைத்து உள்ளனர்.
இது போல் பல நிகழ்வுகளுடன் இன்றைய இந்தியா
உள்ளது. ஒரு பக்கம் அணு ஆயுத ஒப்பந்தம்,
ஒரு பக்கம் வறுமை, ஒரு பக்கம் பெரும்
பணக்காரர், ஒரு பக்கம் பசி பட்டினி என்ற
பல சூழ்நிலைகளில் தான் இன்றைய இந்தியா
உள்ளது. பணக்காரர்கள் பணக்காரர்களாகவே
இருக்கும் போது. ஏழைகள் ஏழைகளாக தானே
இருக்க முடியும்.. காலத்தின் கட்டாயமும்
அது தான்.
இறைவன் மரணத்தையும்
வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார்
மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர்கள்
என்று உங்களை சோதிக்கும் பொருட்டு..
திருக்குர்ஆன் 67:2
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன்
உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும்
நற்செயல்கள் புரிந்து கொண்டும், மேலும்
ஒருவருக்கொருவர் சத்தியத்தை
எடுத்துரைத்தும் பொறுமையைக்
கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும்
இருந்தார்களோ அவர்களைதவிர.. திருக்குர்ஆன்
103: 1 - 3
|
|
|
தமிழ் இஸ்லாமிய
செய்தி ஊடகத்தின் உலக வலை |
|