|
அமெரிக்க டாலர்களை
புறக்கணிப்போம்.. யூரோ நாணயங்களை பயன்
படுத்துவோம்.. என்ற வாசகத்தினை நாம்
அடிக்கடி படித்து இருப்போம்.. அல்லது
பார்த்து இருப்போம்.. ஆம்.. அந்த
வார்த்தையின் அர்த்தமானது தற்போது
மெய்ப்பட்டு விட்டது. அமெரிக்க நாணயத்தின்
மதிப்பானது பல்வேறு சூழ்நிலைகளால்
குறைந்து வருகிறது. அதன் மதிப்பு எதனால்
குறைந்தது எப்படி குறைந்தது என்பது பற்றி
ஆராய அமெரிக்க அதிபர். ஜார்ஜ் புஷ்
தலைமையில் D.C. Christopher Cox –
Chairman of the Securities and Exchange
Commission, Vice – President Dick
Cheney, and Henry Paulson – Secretary of
the Treasary, Federal Reserve Chairman
Ben Bernanke ஆகியோர்கள் கூடி
விவாதித்தனர். ஆனால் எந்தவிதமான சரியான
தீர்வும் ஏற்படவில்லை. பண மதிப்பு
வீழ்ச்சியினை பற்றி Jean – Claude Trichet
(President – European Central Bank)
அவர்கள் குறிப்பிடுகையில், அமெரிக்காவில்
தற்போது உள்ள பணத்தின் மதிப்பானது
சரிந்துகொண்டு தான் செல்லும். அதனை தூக்கி
நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டாலும்
மேன்மேலும் தோல்வி தான் ஏற்படும் என்றார்.
பல நாடுகளில் அமெரிக்க தானாக முன் வந்து
ஏற்படுத்திய போரால், ஆப்கானிஸ்தான் ஈராக்
பாலஸ்தீனம் தற்போது பாகிஸ்தான் போன்ற
நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
என்பது நமக்கு தெரிந்தது தான்.
இருந்தாலும் அமெரிக்க என்னவென்றால்
தாங்களுக்கு இந்த போர் மூலமாக வெற்றி
பெற்று விட்டதாக பறைசாற்றிக்கொண்டு
திரிகின்றன. ஆனால் ஏக இறைவன் அவர்கள்
சொல்லும் வெற்றியினை மகிழ்ச்சியாக கொண்டாட
முடியாமல் அமெரிக்க நாடுகள் அனைத்தையும்
சிறிது சிறிதாக மழை, வெள்ளம், புயல்
காற்று, மின்சார பற்றாக்குறை, மற்றும்
இயற்கை சீரழிவு போன்ற பல காரணங்களால்
அழித்துக்கொண்டு இருக்கின்றான் என்பதினை
காணும் போதும் அவர்களுக்கு வேதனை தான்
மிச்சம்.
அல்லது, தீயவைகளைச்
செய்கிறார்களே அவர்கள் நம்மை விட்டும்
தாங்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று
எண்ணிக்கொண்டார்களா.? (அவ்வாறாயின்
இதைப்பற்றி) அவர்கள் தீர்மானம் செய்தது
மிகக்கெட்டது.
திருக்குர்ஆன் 29: 4
பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் மூலமாக ஒரு
அமைதி தீர்வு ஏற்படும் என்று நடுநிலையாளர்
நினைத்தனர் 27.12.2007 அன்று வியாழக்கிழமை
வரை. ஆனால் அங்கு நடந்த முன்னாள் அதிபர்
பெனாசிர் பூட்டோவின் அநியாய படுகொலை என்ற
துயர சம்பவத்தால் அந்த அமைதியினை மண்ணொடு
மண்ணாக புதைத்து விட்டு, தற்போது துப்பறிய
பாகிஸ்தான் சென்று உள்ளனர் 6 பேர்கள்
கொண்ட ஸ்காட்லாந்து யார்டு காவலாளிகள்.
நம் நாட்டில் காக்கி சட்டை போட்டு கொண்டு
இருக்கும் ஒரு காஸ்டபிளை விட்டால் ஆதிக்க
சக்திகள் தான் செய்தது என்று துப்பு
துலக்கி அறிக்கையினை வெளியிட்டு விடுவார்.
ஆனால் பாகிஸ்தான் அரசாங்கமோ.. பல செலவுகளை
செய்து ஸ்காட்லாந்து யார்டு காவலாளிகளை
வரவழைத்து உள்ளனர். எங்களுக்கு இது வரை
எந்த விதமான பயனுள்ள தகவலும் கிடைக்க
வில்லை என்பதும் மட்டும் அவர்களின்
கூற்றாக இருந்தாலும், அமெரிக்க
தீவிரவாதத்தை ஆதரிக்கும் பல ஊடகங்கள்
பற்பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு
ஊளையிடுகிறது. உண்மையை மறைக்கும் இத்தகைய
செயல்களால் மேற்கத்திய நாடுகள் மேலோங்கி
நின்றாலும் கீழ்த்தரமான புத்தியுடன் கீழே
சருகுகிறது.
அந்த படுகொலை சம்பவத்திற்குப்பின் நடந்த
வன்முறையால் பாகிஸ்தான் நாட்டில் 200
மில்லியன் டாலர் மதிப்பின் படி நஷ்டம்
ஏற்பட்டுள்ளது என்றும், பெனாசிர்
பூட்டோவின் மகன் மற்றும் மகள்கள் அனைவரும்
பாதுகாப்பு கருதி தற்போது துபாய் நாட்டில்
இருக்கிறார்கள் என்பதினை அமீரக செய்திகள்
நமக்கு தெரிவிக்கின்றன.
வாகித் அர்ஷத் (Waheed Arshad – Major
General – Pakistan Chief Military)
அவர்கள் இதனை பற்றி கூறுகையில்,
பாகிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு
பிரச்சனைகளில் தலையிட அமெரிக்காவிற்கு
தகுதியில்லை. எங்கள் நாடு பாகிஸ்தான்..
இங்கு அந்நிய நாட்டு படைகளின்
ஆக்கிரமிப்புகளை நாங்கள் அனுமதிக்க
மாட்டோம். அமெரிக்காவின் ஆதரவு எங்களுக்கு
தேவையில்லை என்று ஆணித்தரமாக சொல்கிறார்.
நான் தேர்தலில் வெற்றி பெற்றால்
பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பிற்கு
எங்களின் படைகளை அனுப்புவோம் என்று ஹிலாரி
கிளிண்டன் சொன்னதற்கு அந்த நாட்டில் பல
எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
அமெரிக்காவிற்கு ஆதரவாக தான்
செயல்பட்டதற்காக வருத்தினை தற்போது
பாகிஸ்தான் அதிபர் முஸரப் அவர்கள்
உணருகிறார்.
அமெரிக்க டாலர் வீழ்ச்சியால்
அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு ஏற்பட
வில்லை. பல உலக நாடுகள் பலவகையிலும்
பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக வளைகுடா நாடுகள் பற்பல
வகையிலும் பாதிப்புக்குள்ளாகி
இருக்கின்றன. உலக சந்தையில் அதிகமான
அளவில் எண்ணெய்களை உற்பத்தி செய்யும்
வளைகுடா நாட்டில் தற்போது எல்லாவிதமான
அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் ஏறி
விட்டன. சில மாதங்களுக்கு முன் விற்ற
தேநீரானது முந்தைய விலையை விட தற்போது ஒரு
மடங்கு அதிகரித்து விட்டது. மற்றும்
வீட்டு குடியிருப்பு வாடகையும் (Housing
Rental Charges) அதிகமாகி விட்டதால்
பல குடும்பங்கள் அவரவர்களின் சொந்த
நாட்டிற்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் வளைகுடா நாட்டு பொருளாதாரமானது
சிறிது பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில்
கொண்ட வளைகுடா நாடுகளின் கூட்டு
அமைப்பானது (Gulf Countries Council- GCC)
சில மாதங்களுக்கு முன்பாக ஹோடா கத்தரில்
கூடி வளைகுடா நாடு முழுவதும் ஒரே நாணய
மதிப்பினை 2010 க்குள் கொண்டு வர வேண்டும்
என்று தீர்மானம் செய்தது. இந்த
கூட்டத்தில் ஈரான் நாட்டின் அதிபர் அஹமது
நிஜாத் அவர்களும் கலந்துக்கொண்டார்.
வளைகுடா நாடுகள் முழுவதும் ஒரே நாணய
மதிப்பு வருவதினை பல நடுநிலையாளர்களும்
மற்றும் இங்குள்ள மக்களும்
எதிர்பார்க்கிறார்கள். இன்ஷா அல்லாஹ்..
அப்படி வந்தால் அமெரிக்க நாணய மதிப்பானது
அடியோடு ஒழிந்துபோக இதுவொரு
வாய்ப்பாகவும், அமெரிக்காவிற்கு நல்லதொரு
அடியாகவும் இது இருக்கும். அத்துடன் யூரோ
நாணயங்களையும் பயன்படுத்துவதற்கும் பல
நாடுகள் தற்போது தயாராகி விட்டன.
அனாபொலிஸ் மாநாட்டில் (பாலஸ்தீனம் -
இஸ்ரேல் அமைதி உடன்பாடு - இதனை பற்றி
கொஞ்சம் அறிந்து கொள்ள இது தான் இஸ்லாம் -
மேற்குலகின் இன்றைய நிலைப்பாடு என்ற
கட்டுரை பதிவினை காணுங்கள்) தோல்விக்கண்ட
ஆதிக்கச்சக்தியான அமெரிக்கா தற்போது
கையில் எடுத்து இருப்பதோ மத்திய கிழக்கு
நாடுகளையும் மற்றும் வளைகுடா நாடுகளையும்
தான்.
பாலஸ்தீனம் - இஸ்ரேல் நாட்டின் அமைதிக்கு
ஆதரவு திரட்ட போகிறேன் என்ற மாயை
போர்வையினை கையில் எடுத்துக்கொண்டு இந்த
மாதம் 8 ம் தேதியிலிருந்து துவங்கி 16
தேதி வரை முடியக்கூடிய 8 நாள்கள்
பயணங்களாக பஹ்ரைன், குவைத், சௌதி அரேபியா,
ஐக்கிய அமீரகம் மற்றும் ஜோர்டான்
நாடுகளில் அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள்
வந்து இருந்தார் என்பதினை ஊடகங்கள் நமக்கு
தெரிவித்தன. இவரின் வருகையினை ஒட்டி பல
மாதங்களுக்கு முன்பு இருந்தே பல உளவு
நிறுவனங்கள் வளைகுடா நாடுகளின் கடல்
பகுதியிலும் மற்றும் கரை பகுதியிலும் வலம்
வந்தன.
நிச்சயமாக எவன்
(ஷைத்தானாகிய) அவனை நண்பனாக ஆக்கிக்
கொள்கிறானோ, நிச்சயமாக காரியம், அவன்,
இவனை (ஷைத்தானாகிய) அவன் வழிகெடுத்து, நரக
வேதனையின் பக்கமே செலுத்தி விடுவான் என்று
(ஷைத்தானாகிய) அவன் மீது விதியாக்கப்பட்டு
விட்டது.
திருக்குர்ஆன் 22: 4
அமெரிக்க அதிபரின் பயண விவரங்களை மிகவும்
ரகசியமான ஒன்றும் என்றும் அவர் எங்கு
எத்தனை நாள்கள் தங்க போகிறார் என்பதினை
நாங்கள் சொல்ல மாட்டோம் என்றும் அமெரிக்க
அரசுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும், அமீரக செய்தி பத்திரிகைகள்
அவரின் வருகையினை பற்றிய சிறிய தகவல்களை
தந்து உள்ளது. 21 புல்லட் ஃபுரூப்
கார்கள், 747 – மற்றும் 200 வகையை சார்ந்த
மூன்று விமானங்கள், 2 ஹெலிகாப்டர், 250
பேர்கள் கொண்ட உளவு நிறுவனர்கள், 150
தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், 200 நபர்கள்
அரசாங்க தூதுக்குழுவினர், 50 வெள்ளை
மாளிகை பாதுகாவலர்கள், 5 சமையல் காரர்கள்,
15 மோப்ப நாய்கள் என்ற பட்டியலுடன் அவர்
இங்கு வந்து இருந்தார். இது மட்டுமல்லாமல்
இன்னும் சில பட்டியல்களும் நீண்டு கொண்டே
போகிறது. ஜனவரி 9 மற்றும் 10ம் தேதி
இஸ்ரேல் மற்றும் மேற்கு கரைப்பகுதியில்
பாலஸ்தீன அதிபர் மற்றும் இஸ்ரேல்
பிரதமர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஜனவரி
11ம் தேதி குவைத் அதிபர் சந்திப்பு, ஜனவரி
குவைத் நாட்டில் அமெரிக்க படைகள்
தங்கிருக்கும் இடங்களை பார்வையிடும்
நிகழ்ச்சி, ஜனவரி 13ம் தேதி அமீரக தலைநகர்
அபுதாபியில் அதிபர் ஷேக் கலிபா சந்திப்பு,
ஜனவரி 14ம் தேதி சவூதி அரேபியா மன்னரை
சந்திக்கும் நிகழ்ச்சி, ஜனவரி 15ம்
ரியாத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துக்கொள்வது, ஜனவரி 16ம் தேதி எகிப்து
அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி என்று
சொல்கிறது அந்த செய்திகள். இந்த பயண
விவரங்களானது கடைசி நேரத்தில் மாறலாம்.
இந்த பயணத்திற்கு பல டாலர்கள் செலவுகள்.
அமெரிக்க அதிபரின் வருகையொட்டி பேச்சு
வார்த்தை ஒன்றினை பாலஸ்தீன அதிபர்.
முஹம்து அப்பாஸ் அவர்களும் சௌதி அரேபிய
அரசரான அப்துல்லா பின் அப்துல் அஜீஸ்
அவர்களும் ரியாத் நகரில் சமீபத்தில்
சந்தித்து பேசினார்கள் என்ற தகவலையும்
அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபரின் இந்த பயணம் தேவையற்ற
ஒன்று, இதன் மூலமாக பாலஸ்தீனம்
மக்களுக்கும் மற்றும் உள்ள வளைகுடா
நாடுகளுக்கும் அமெரிக்கா தலைவலியினை தான்
உண்டாக்க போகிறது என்று மேற்கு பகுதியின்
ரமால்லா என்ற இடத்திலுள்ள டாக்ஸி டிரைவர்
யாஷர் அபத் கூறி உள்ளார். நான்கு ஐந்து
பயணிகளை பத்திரமாக அழைத்துச்செல்லும் ஒரு
ஓட்டுனருக்கே ஒரு கவலை இருக்கும் போது..
பல மக்களை வழி நடத்தி செல்லும் அந்தந்த
நாட்டு தலைவர்களுக்கு எந்த கவலையும்
இல்லையா..?..!
ஒரு பக்கம் அமைதியினை வலியுறுத்தும்
அமெரிக்கா ஆதரவில் உள்ள இஸ்ரேலிய
படையானது, சமீபத்தில் காஸா பகுதியில் அல்
புரிஜி (Al Bureiji) என்ற இடத்தில்
உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த பல
ஆண்களையும் பல பெண்களையும் மற்றும்
ஒன்றும் அறியாத பிஞ்சுக்குழந்தைகளையும்
தாக்கி கொலை செய்து உள்ளனர். சிறு மலர்களை
சிதைக்கும் போது மனித நேயம் மாய்ந்து போய்
விட்டதோ என்ற ஆச்சரிய கேள்வியுடன்.. இது
போல் பல சம்பங்கள் நாள்தோறும் காஸா
மற்றும் பாலஸ்தீன பகுதியில் நடைபெற்று
கொண்டு தான் இருக்கிறது என்பதினை பற்றிய
செய்திகளை ஊடகங்களை பார்க்கும் அன்பர்கள்
அறிவார்கள். தோட்டாக்களும்
துப்பாக்கிகளும் வருங்காலத்தில் இந்த
பகுதியில் கிடைக்கக்கூடிய புதை பொருட்களாக
மாறி விடும் என்ற அச்ச உணர்வுடன் அப்பகுதி
மக்கள்.
இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்..
மக்கள் நல்லவிதமாய் நடந்து கொண்டால்
நாங்களும் நல்ல முறையில் நடப்போம்.
அவர்கள் தீய முறையை மேற்கொண்டால்
நாங்களும் தீய முறையில் நடப்போம் என்று
கூறி சந்தர்ப்பவாதிகளாய் ஆகிவிடாதீர்கள்..
மாறாக, இவ்வாறு உங்களை உறுதிப்படுத்தக்
கற்றுக் கொள்ளுங்கள். அதாவது, மக்கள் நல்ல
முறையில் நடந்தாலும் (தீய முறையில்
நடந்தாலும்) நீங்கள் நல்ல முறையில் நடக்க
வேண்டும். அவர்கள் நீதி தவறுகின்றார்கள்
என்பதற்காக நீங்களும் அநீதி இழைத்தல்
கூடாது. அவர்கள் மேற்கொள்ளும் நடத்தையை
மேற்கொள்ளக்கூடாது.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)
ஆதாரம் : மிஷ்காத்
|