|
இறைத்செய்தி
(வஹி) யில் குழப்பமா...? - 4 |
தொடர் 3 க்கு செல்க.
கேள்வி:5 போர், சமாதானம், கனீமத்தைப்
பங்கிடுதல் வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள்,
எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது
எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது; இதனால் சல்மான்
ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப்பரிகசிக்கிறார்
என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:5 ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப்
பிரச்சனைகளையும் சொல்லித்தருவது முட்டாள்களின்
பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை.
முஸ்லிம் சமுதாயம் அதை பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது.
கடவுள் பன்றி உருவம் எடுப்பது,
மீனும், மனிதனும் இணைந்து மனிதப் பிள்ளையைப்
பெற்றெடுப்பது, யானை முகமும் மனித உடலும் கொண்ட
விசித்திரப் படைப்பு, ஐந்தாறு கைகள், ஆறேழு முகங்கள் கொண்ட
அதிசய உருவங்கள். இவைகளையே வேதத்தில் பார்த்துப்
பழகியவர்களுக்கு வந்தவர்களுக்கு முஹம்மதுக்கு வழங்கப்பட்ட
வேதத்தில் இவையெல்லாம் இல்லாவிட்டால் அவர்களுக்கு
பரிகசிப்பாகத் தோன்றுவதில் வியப்பில்லை. இவைதான் வேதத்தின்
இலக்கணம் என்ற நம்பிக்கையுடையோர் நன்றாகப்
பரிகசிக்கட்டும்!
கேள்வி:6 கவிஞர்களைப் பற்றியும், கவிதையைப்பற்றியும்
முஹம்மது மிக மோசமாக நினைத்திருந்தார். அவர் குர்ஆனை
வழங்கியதற்காக மக்கள் அவரைக் கவிஞர் என்று கவுரவித்ததை
அவர் நிராகரித்தார். தன்னை நபி என்றே மக்கள் அறிந்துகொள்ள
வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். ஒரு கவியுடைய
கவிதையைக் கேட்ட போது ''அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்!
ஒருவனுடைய வயிற்றில் சீழ்நிரம்பியிருப்பதைவிட அவனுடைய
உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பது மோசமானது'' என்று
முஹம்மது சொன்னதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. மக்கத்துப்
பரத்தையரையும் கவிஞர்களையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கும்
போது ''எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை'' என்று முஹம்மது கூறியதாக ரஷ்டியின்
புத்தகத்தில் காணப்படுகின்றது. மறுபுறமோ முஹம்மது தன்னுடைய
தத்துவத்தைப் போற்றுவதற்காகவும், தனது வெற்றியை
உயர்த்துவதற்காகவும், எதிரிகளை பழிப்பதற்காகவும் கஃபு
இப்னு மாலிக், ஹஸ்ஸான் இப்னு தாபித், கஃபு இப்னு ஸþஹைர்
போன்ற கவிஞர்களை அமர்த்திக் கொண்டார். அவர்களுக்கு
தாராளமாக செல்வத்தையும், அடிமைப் பெண்களையும் பரிசில்களாக
வழங்கினார்.
பதில்:6 நபியின் காலத்தின் அரபுலகிலும், உலகின் பல
பகுதிகளிலும் கவிஞர்களுக்கு இருந்த மதிப்பு அளவிடற்கரியதாக
இருந்தது. எழுதவும், படிக்கவும் தெரிந்திராத அன்றைய
மக்கள், கவிஞர்களை உன்னதமானவர்களாக, தெய்வீக அம்சம்
கொண்டவர்களாக, மனிதப் புனிதர்களாக, உத்தமர்களாக எண்ணி
மதித்து வந்தனர். இந்தக் கவுரவத்தை எழுதவும் படிக்கவும்
அறியாத அந்த நபிக்கு வழங்க முன்வந்த போது அதை நிராகரித்து
விட்டார் என்றால் அதுதான் அந்த நபியின் தனித்தன்மை. அவர்
உண்மையாளர்; பதவி, புகழுக்காக இவ்வாறு அவர் வாதிடவில்லை
என்பதற்கு அது மகத்தான சான்றாகவும் அமைந்துள்ளதை நியாய
உணர்வுடன் சிந்திப்பவர்கள் அறியமுடியும். அந்தக் கவுரவத்தை
நிராகரித்துவிட்டு, எதைச் சொன்னால் மக்கள் எதிர்ப்பார்களோ,
துன்பம் தருவார்களோ, கொலை செய்யவும் கூட முயற்சிப்பார்களோ
நாடு கடத்தத் துணிவார்களோ அந்த 'நபி' என்ற தகுதியைலிஅன்றைய
மக்கள் நம்ப மறுத்து இழிமொழி பேசிய நபி என்ற
தகுதியைலிவாதிட்டு அந்தத்துன்பங்களை எதிர்கெண்டாரே அது
அவரது நபித்துவத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. 'கவிஞன்'
என்ற தகுதியை அவர் மறுத்தது அவரது பலமாகவே உள்ளது. அதை
பலவீனமாகக் காட்ட எண்ணுகிறார் ராம்ஸ்வர்ப்.
'எழுத்தாளனுக்கும், பரத்தையருக்கும் எந்த
வித்தியாசமுமில்லை' என்று முஹம்மது கூறியதாக ரஷ்டி
குறிப்பிடுவது பச்சைப் பொய், அவ்வாறு கூறியதாக எந்த
ஆதாரமும் இல்லை. கவிஞர்களைப் பற்றி நபி (ஸல்) ராம்ஸ்வர்ப்
குறிப்பிட்டப்படி மிகமிகமேசமான அபிப்பிராயத்தைக்
கொண்டிருந்ததில்லை.
கவிதை என்ற பெயரால் காம உணர்வைத் தூண்டி விடுவதையும்,
பெண்களின் அங்கங்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதையும்,
மதுபானங்களையும் போதைப் பொருட்களையும் வர்ணித்துப்
பாடுவதையும், தரக்குறைவான வார்த்தைகளால் ஒருவனை அவனது
குலத்தைலிகோத்திரத்தைலிஉருவத்தைலிவிமர்சிக்கும்
கவிஞர்களையும் தான் நபிகள் கண்டித்துள்ளார்கள். அத்தகைய
கவிஞர்களையே ஷைத்தான் என வர்ணித்தார்கள். அத்தகைய
கவிதைகளையே சீழை விடவும் மோசமானது என்றனர். 'லபீத்' என்ற
இஸ்லாத்திற்கு முற்பட்ட கவிஞரின் கவிதையை நபி (ஸல்)
பாரட்டியதை புகாரியில் காண்கிறோம். நல்ல கவிதை ஒன்றை ஒரு
நபித்தோழர் நபியின் முன்னே பாடிக்காட்டிய போது
''திரும்பவும் பாடுவீராக!'' என்று பலமுறை அதை அவர்கள்
ரசித்துக் கேட்டதை (முஸ்லிம் ஆகிய) நூல்களில் நாம்
காண்கிறோம். நபியவர்கள் ரசித்துக்கேட்ட அந்தக் கவிதை
முஸ்லிம் கவிஞருடைய கவிதை அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள
வேண்டும். ஒட்டு மொத்தமாக கவியையும், கவிஞர்களையும் நபிகள்
மறுத்தார்கள் என்பது உண்மைக்கு முரணாகும். நபியவர்களே நல்ல
கவிஞர்களை வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்கு ராம்ஸ்வர்ப்
குறிப்பிட்ட மூன்று கவிஞர்களையும் நபிகள் வரவேற்றது
சான்றாக உள்ளது. இதில் இவர் குறை காண்பதற்கு எதுவுமில்லை.
நபிக்கு இறங்கிய அந்த வேதமும் இருவகைக் கவிஞர்களையும்
குறிப்பிடுகிறது. நல்ல கவிஞர்களை வரவேற்கிறது.
(பார்க்க அல்குர்ஆன் 26:227)
கேள்வி:7 தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த
காபிர்களை சிரச்சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள்
கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில்
முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான்
அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு
அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக்
குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:7 கவிஞர்களை அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக
மட்டும் ஒருபோதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில
கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல கிரிமினல் குற்றங்களைப்
புரிந்ததால், அந்தக் கிரிமினல் குற்றங்களுக்காகவே
கொல்லப்பட்டனர். 'ராம்ஸ்வர்ப்' என்ற எழுத்தாளர் திருடி
விட்டார் என்று வைத்துக் கொள்வோம், அவருக்கு நீதிமன்றம்
அதற்காக தண்டனை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர்
எழுத்தாளன் என்ற காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாக
எவரேனும் கூறினால் அவனைவிட முட்டாள் எவனுமிருக்க முடியாது.
அவர் ஹிந்துவாக இருப்பதால் தான் தண்டிக்கப்பட்டார் என்று
கூறுவதும் முட்டாள் தனமானது. இதேபோல் தான் எவர் குற்றம்
செய்தாலும் இஸ்லாம் சலுகை காட்டியதில்லை. குற்றவாளிகள்
கவிஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிச்சலுகை எதுவும்
இஸ்லாம் காட்டவில்லை. கவிஞர்களோ, கவிஞர் அல்லாதவர்களோ
எவராக இருந்தாலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து இஸ்லாம்
தப்பவிட்டதில்லை. அந்த அடிப்படையில் சில கவிஞர்களுக்கு
வழங்கப்பட்ட தண்டனையைத்தான் ராம்ஸ்வர்ப் விமர்சிக்கிறார்.
உதாரணமாக அவர் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களில் கஃபு இப்னு
அஷ்ரபை எடுத்துக் கொள்வோம் .
நபிகள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் முதன் முதலில்
'பத்ரு' என்னும் போர்க்களத்தைச் சந்திக்கிறார்கள். அதில்
நபிகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அந்தச்
சந்தர்ப்பத்தில் மதீனாவில்லிஇஸ்லாமிய நாட்டில் ஒரு
பிரஜையாக கஃபு இப்னு அஷ்ரப் என்ற கவிஞனும் இருந்தான்.
பத்ரு வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே
மக்காவுக்கு ஓடி அங்கேயே தங்கி முஸ்லிம்களுக்கெதிராக
மக்கத்துத் தலைவர்களைத் தூண்டி விட்டதோடு அவனது சொந்த
நாட்டின் இரகசியங்களையும் அர்களுக்குத் தெரிவித்தான். இதன்
காரணமாகவே அவனைக் கொல்லுமாறு நபிகள் கட்டளையிட்டார்கள்.
இப்னு இஸ்ஹாக் இதனை குறிப்பிடுகிறார். ஆதாரப்பூர்வமான வேறு
நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது. ஒரு நாட்டைச்
சேர்ந்தவன், எதிரி நாட்டுக்குலிஅதுவும் இரண்டு
நாடுகளுக்குமிடையே பகைமை உச்சகட்டத்தை
அடைந்திருக்கும்போதுலிபோர் மேகங்கள் சூழ்ந்து நெருக்கடியான
நிலையில் இருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவன்
எதிரி நாட்டுக்கு இராணுவ இரகசியங்களைத் தெரிவித்தால் எந்த
நாடும் அவனை மன்னிக்க முன்வராது. தேசத் துரோகிகளுக்கு
கடுமையான தண்டனையை உலகில் எந்த நாடும் அளிக்கும் அந்த
தேசத்துரோக குற்றத்தையே கஃபு இப்னு அஷ்ரப் என்பவன்
செய்தான். தேசத் துரோகி கவிஞர் என்பதற்காக அவனை
மன்னிக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறார் ராம்ஸ்வர்ப். ஏனைய
கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் அவர்கள் கவிஞர்களாக
இருந்தார்கள் என்ற காரணத்துக்காக அல்ல என்பதை ராம்ஸ்வர்ப்
உணரவேண்டும்.
கேள்வி:8 அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார்
ராம்ஸ்வர்ப்.
பதில்:8 இஸ்லாம் ஒருபோதும் விமர்சனத்தை மறுத்ததில்லை.
யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம்
செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை
ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக்கூடாது.
விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை
ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது. இதில்
எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருதமாட்டார்கள். ஒரு
தேசத்தில் பிரஜையாக இருப்பவன் அந்த தேசத்தின்
நீதிமன்றத்தைலிஅது வழங்கும் தீர்ப்பை விமர்சிக்க
அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தேசம் சம்மந்தப்பட்ட சில
விசயங்களை விமர்சனம் செய்வது தடுக்கப்படுகின்றது. அவ்வாறு
விமர்சனம் செய்தால் தேசத்துரோகி என்று அவனுக்குப் பட்டம்
சூட்டப்பட்டு தண்டிக்கவும்படுகிறது. ஒரு தேசத்துக்கு என்று
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைகள் இருப்பதை ராம்ஸ்வர்ப்
போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது போலவே ஒரு
மதத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவனைக் கருதவேண்டுமானால் அந்த
மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை அவன் அப்படியே ஏற்றுக்
கொள்ள வேண்டும். அதை ஏற்பதற்கு முன்னால் அவன் எவ்வளவு
வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; கேள்விகள் கேட்கலாம்
என்பது எப்படித்தவறாகும். ஒரு ராம்ஸ்வர்ப் இஸ்லாத்தை
விமர்சனம் செய்யலாம். அல்லாஹ்வை, அவன் தூதரை, அவன் அளித்த
வேதத்தை விமர்சனம் செய்யலாம். இஸ்லாம் அதற்கு பதில் தரும்.
ஒரு சாலமன் ரஷ்டி
அல்லாஹ்வைலிவேதத்தைலிநபியைலிஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட
சாலமன் ரஷ்டி விமர்சித்தால் அவர் இஸ்லாத்தை விட்டும்
வெளியேறியவர் இன்னமும் இஸ்லாத்தின் கொள்கைகளை அவர்
நம்பவில்லை என்று கூறி அவரை இஸ்லாத்தை விட்டும்
வெளியேறியவர் என்று இஸ்லாம் முடிவு செய்கிறது. எந்தக்
கொள்கையை ஏற்றுவிட்டதாக ஒருவன் கூறுகிறானோ, அவன் அந்தக்
கொள்கையை நம்பாதவனாக இருந்தால் அவரது கூற்று எப்படி
உண்மையாக இருக்கமுடியும்? இதைத்தான் இஸ்லாம் கூறுகிறது.
ராம்ஸ்வர்ப் இதில் குறை காண்பதற்கு எதுவுமில்லை. அவரது
புலமை சான்ற கேள்விகள் எதுவுமே புலமை சான்றதாக இல்லை.
பொய்யும், முரண்பாடும், பொருந்தா வாதங்களும் நிறைந்ததன்
கேள்விகளுக்கு 'புலமை சான்ற கேள்விகள்' என்று அவர்
பெருமிதப்பட்டுக்கொள்வதில் அர்த்தம் எதுவுமில்லை.
(முடிந்தது)
தொடர் 3 க்கு செல்க
|
|
|
தமிழ்
இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக
வலை | |