|
|
ஆடை கட்டிய
மொட்டுகள்
ரோட்டோரங்களில்
அணிவகுப்பாய்,
ரசித்துப் பயணிக்கிறேன்
அடுத்த எல்லையில்
மீண்டும் தென்பட்டன
மொட்டுக்கள்
அழுக்குப் படிந்த மேனிகளுடன்.
...
முரண்பாடுகள்
...
மொட்டுக்களையும்
கசக்கும்
மானுட வக்கிரங்கள்
...
நெஞ்சம் கனக்கிறது
...
மகரந்தங்களை
சுமக்கும்
மொட்டுக்களின் தலையில்
மண் மூட்டைகள்
தளிராய்
வளர வேண்டியவர்கள்
வேர்களாய்
புதைந்துப் போகிறார்கள்
...
குழந்தை தொழிலாளிகள்
அரசு கவலை
...
திட்டங்களையும்
ஆவணங்களையும்
சுமக்க
உயரும் கட்டிடங்கள்.
தோண்டி பார்த்தால்
அங்கும் தென்படும்
மொட்டுக்களின்
விலா எலும்புகள்.
|