www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்

இப்படிக்கு பெண்மை

திருச்சி. சகோதரி ஃபரிதா

 

 

 

தோழர்களே..தோழிகளே..
குற்ற உணர்வில்
நான் குமறுவதை கேளுங்கள்..!

எனக்கு ஏதேனும்
நல்வழி கூறுங்கள்..

நாகரீகம் வளர்ந்து விட்டது
நானும் வளர்ந்து விட்டேன்
நானும் நாகரீக 'நங்கை'' என
நவிழும் தருவாயில்
என் சுவாசத்தை
நுரையீரல் ஏற்க மறுக்கிறதே..!

அதன் சுருங்கி விரியும்
தன்மையை இழந்து..
என்னை..
நடை பிணமாக மாற்றுகிறதே..?
காரணம்..!..?

நான் சுவாசிக்கும்
சுதந்திர காற்றில்
நஞ்சு உள்ளதாம்..!

பெண்மையை விற்று
மென்மையை வாங்கி
மென்மையை விற்று
பெண்மையை வாங்கும்
நானும் ஒர் பெண்மை தானா..?

கட்டி காத்த கலாச்சாரத்திற்கு
கல்லறை கட்டி விட்டு
காலணா காசுக்கு
மலர் வளையம் வைத்து விட்டு
அதன் மேலேயே
கேட் வாக் வரும்
நான்..!..?

அழகை அரை நிர்வாணமாக்கி
ஆடவர் மத்தியிலே..
'நான் தான் அழகி' என
நாணமின்றி கூறும்
நான்.

ஆடையில்லா மனிதன்
அரை மனிதன்
ஆனால்
இருந்தும் இல்லாதது போல்
ஆணவ செருக்குடன்
வளம் வரும் நான்..?..!
நானும் ஒரு பெண்மை தானா?

கலாச்சாரத்தில் காலுன்றி நிற்கும்
என் நாட்டில்..
கணுக்கால் தெரிந்தாலே
கதறும் என் நாட்டில்..
இன்று
என் தொடை தெரிய
வளம் வருகிறேனே..!

நாகரீக வளர்ச்சி
என்னை உயர்த்தவா..
என் உடையை உயர்த்தவா..?
இரண்டு கஜன் துணியில் மூடிய
என் அழகை
இரண்டு ஜான் துணியில்
மூடி வைக்க கற்று தந்த
என் நாகரீகத்திற்கு
நான் நன்றி சொல்ல வேண்டுமா..?

காட்சி பெட்டியில் வரும்
விளம்பரங்களை கூட
களையர்கள் கண்கள்
காண மறுப்பதில்லை..
காரணம்..
கன்னியர்களின் காம வளைவு
கண் இமைக்க கூட
விடுவதில்லையே..!

பெண் அண்டகத்தை
பெட்டகத்தில் வைத்து
பாதுகாக்க
வேண்டிய நான்
இன்று
பேரம் பேசி விற்கின்றேனே..
கால் சென்டர் முதல்
காஃபி பார் வரை
என்னை அமர்த்தி
என் மென்மையை கொச்சைப் படுத்தி
என்னை பேரம் பேசும் நிலை..
காரணம்..
பி.ஏ வாக இருப்பதற்கும்
பர்சானலிட்டி தேவைப்படுகிறதே..!

கன்னியரின் கடை கண்
பார்வைக்காக காத்திருந்த
காளையர்களின் காலம்
போய்.. இன்றோ..
காத்திரு .. மச்சான்
கவர்ச்சி புயல்
இதோ வந்து விடும்
என் சொல்லும் போது
நான் பெண்மை(யாக)
வெட்கி நாணுகிறேனே..!

மேலை நாட்டு கலாச்சாரத்தை
மேடை போட்டு
வரவேற்கும் இவர்கள்
அதன் உச்ச நிலையான
காண்பவரை கண்ட இடத்தில்
முத்தமிடும்
ஈன செயலை செய்து
குற்றியுரும் கொலை உயிருமாக
இருக்கும் என்னை
ஓரேடியாக கொன்று
புதைத்து விடுவார்களோ..
என்று என்னுள்
தினம் தினம் குமறுகின்றேன்..

முக்காடிட்ட பெண்களும்
முக்கால் பாகம் அழகு
தெரிய திரிவதால்..
முழுக்க நினைந்த பிறகு
முக்காடு எதற்கு என
நான் முணங்குகின்றேன்..

என் குமறலுக்கும்
முணங்களுக்கும்
முற்று புள்ளி வையுங்கள்..

பேரிளம் பெண்கள்
பாதுக்கும் என்னை
(பெண்மையை)
இளமை கொஞ்சும்
இளசுகளிடமும்
பாதுகாத்துக் கொடுங்கள்..

வியாபார சந்தையில்
என்னை விற்க
தடை விதியுங்கள்..

கண்ணை இமை காப்பது போல்
என்னை மென்மையாக
பாதுகாத்துக் கொடுங்கள்..
இப்படிக்கு
பெண்மை..
 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை