சுன்னத் வல் ஜமாஅத் என்றப் பெயரில் அறங்கேறிய இந்த கொடுமையை தாங்க முடியாத சில ஓரளவு விபரம் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர் முகம் சுலித்தனர். பிற முஸ்லிம் பெயர் தாங்கிகள் இது குறித்தெல்லாம் எதுவும் கண்டுக் கொள்ளாமல் 'ஜம்'மென்று சுன்னத் பேஜ் குத்திக் கொண்டு அலைந்தனர்.
தமிழக மக்களிடம் செல்லாக்காசாக மாறி விட்ட இந்த ஜாஹிலியத் கதைகளை மீண்டும் உரமூட்ட முயற்சிக்கும் பரங்கிப்பேட்டை சுன்னத்வல்ஜமாஅத் பேர்வழிகள் பரிதாபத்துக்குரியவர்களாக தெரிகின்றனர். உண்மையில் அவர்களை நினைக்கும் போது பரிதாபப்படுகிறோம் மார்க்கத்தின் அச்சரம் கூட தெரியாத நிலையில் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று நினைத்துக் கொண்டு முஹம்மத் காசிம்(நாகூர்) போன்ற அடிமுட்டாள்களுக்கு மேடைப் போட்டு கொடுத்து உளர விடுவது அவர்கள் மீதான பரிதாபத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.
பரங்கிப்பேட்டை சுன்னாக்கள் உட்பட உலகிற்கு மீண்டும் இணைவைத்தலின் கொடுமையை நினைவூட்டுகிறோம்
ஜீஎன் (பரங்கிப்பேட்டை)
“ஷிர்க்” என்பது சிலைகளை வணங்குவதும், கோவில்களுக்கு சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்கள் பலர் கருதி வருகின்றனர். அதனால் ஷிர்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர், இந்த தவறான எண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரக நெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்கான செயல்களை செய்யாதீாகள் விட்டுவிடுங்கள் என்று கூறும்போது, நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா கிருஷ்ணனை வணங்குகிறோமா; எங்களைப் பார்த்து ஷிர்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகிறீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும் தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்து கொண்டார்கள், இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.
“ஷிர்க்” என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படைப்பினங்களில் எதையாவது அல்லாஹ்விற்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது “தவ்ஹீத்” என்னும் ஏக இறை கொள்கைக்கு நேர் முரணானது தான். “ஷிர்க்” முஸ்லிம்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் “வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும். இதற்கு நேர் மாறுபட்டதுதான் “ஷிர்க்” அதாவது வணக்கத்திற்கு தகுதியற்ற அல்லாஹ் அல்லாத யாருக்காவது, வணக்க வகைகளில் எதையேனும் செய்வது. அல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் அனைத்தும் வணக்கத்திற்கு தகுதியற்றவைகளாகும். வணக்கங்களில் எதையேனும் ராமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ செய்தாலும் சரி, அல்லது முஹையத்தீன் அப்துல் காதிருக்கோ, நாகூர் சாஹிபிற்கோ செய்தாலும் சரி, எல்லாம் ஷிர்க்காவே கருதப்படும். ஏனெனில் படைக்கப்பட்டவாகள் என்ற விஷயத்தில் இவாகள் எல்லோரும் சமமானவாகளெ. மலக்கானாலும், நபியானாலும், வலியானாலும், சாதாரண மனிதர்களானாலும் எல்லோரும் படைக்கப்பட்டவர்கள் தான், எனவே இவர்கள் யாரும் எந்த வணக்கத்திற்கும் தகுதியற்றவர்களாவார்கள்.
வணக்கம் என்பது பயபக்தியோடு அல்லாஹ்வை நேசித்து அவனை வணங்குவதாகும். அல்லாஹ்விற்கு செலுத்தும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வணக்கம் என்று சொல்லப்படும், இவ்வணக்கம், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது போன்று செய்யப்பட வேண்டும், அவர்கள் காண்பித்தத் தந்து செய்யுமாறு கட்டளையிட்டுள்ள வணக்கம் பலவகைப்படும். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், கலிமத்துத்தவ்ஹீதை மொழிதல், ஈமானின் கடமைகளை நம்புதல், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதல், அறிவு தேடுதல், இவைகள் எல்லாம் வணக்கங்களாகும். இவ்வாறே அழைத்து உதவி தேடுதல், அபயம் தேடுதல், காவல் தேடுதல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல் இவைகள் வணக்கங்களாகும்.
இது போன்ற வணக்கங்களில் எதையாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்வததான் “ஷிர்க்” என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும். அழைத்து உதவி தேடுதல் வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். எனவே அல்லாஹ் ஒருவனை மட்டுமே கஷ்ட துன்ப நேரங்களில் அழைக்க வேண்டும். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பது ஷிர்க்காகும் என்பதை அறிகிறோம்.
உதாரணமாக - இறந்து போன, அதுவும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் புதைக்கப்பட்டுள்ளவர்களை கஷ்ட துன்ப நேரங்களில் அழைப்பது, அதாவது யாமுஹையத்தீனே, யாஷாஹுல் ஹமீதே என்னை காப்பாற்றுங்ள் என்று கூறி அழைப்பது ஷிர்க் என்னும் மன்னிக்கப்படாத பெரும் பாவமாகும்.
நேர்ச்சை செய்வது வணக்கத்தின் வகையைச் சார்ந்ததாகும். இது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாதாருக்கு நேர்ச்சை செய்வது ஷிர்க்காகும். (அல்லாஹ்விற்காக நேர்ந்து, அதை கப்ரில் கொண்டு போய் கொடுப்பதும் ஷிர்க்கானது தான்) அதாவது எனக்கு நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிருக்கு ஒரு கடாய் அறுத்துக்குறுபானி (பலி) கொடுப்பேன். எனது காலில் உள்ள வாதம் குணமானால் நாகூர் சாஹிபிற்கு வெள்ளியில் கால் செய்து கொடுப்பென் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மன்னிக்கப்படாத “ஷிர்க்”என்னும் பெரும் பாவமாகும்.
கஷ்ட துன்ப நேரங்களில் முஹையத்தீனையும், நாகூர் சாஹிபையும் அழைப்பதற்கும், ராமன் கிருஷ்ணன் போன்றவர்களை அழைப்பதற்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை, ஏனெனில் இவாகள் எல்லாரும் படைப்பினங்களாவார்கள், படைக்கப்பட்டவர்கள் என்பதில் அவர்கள் எல்லோரும் சமம் தான், அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்கங்களில் எதையேனும் இவர்களில் யாருக்குச் செய்தாலும் அது ஷிர்க்கானது தான் என்பதை அறிய வேண்டும், எனக்கு நோய் குணமானால் ராமனுக்கு ஒரு கருங் கடாய் அறுத்து பலி கொடுப்பேன் என்று ஒரு ஹிந்து நேர்ச்சை செய்வதற்கும், என் நோய் குணமானால் முஹையத்தீன் அப்துல் காதிரு ஜீலானி அவர்கள் பெயரில் ஒரு கிடாய் அறுத்து பாத்திஹா ஓதுவேன் என்று நேருவதற்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை.