|
416)பெண்கள் விளம்பரத்தில்
குரல் கொடுக்கலாமா?
mus0(at)hotmaildotcom
பெண்களின் குரல் வெளியில் தெரியக் கூடாது என்றெல்லாம்
இஸ்லாம் சொல்லவில்லை. தேவைகள் இருக்கும் போது
அவசியம் இருக்கும் போது முஸ்லிம் பெண்கள் யாருடன்
வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மிக மிக முக்கியமாக
அவர்கள் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்று யாருடன்
பேசினாலும் எக்காரணம் கொண்டும் குரலை குழைத்து பேசக்
கூடாது. அதாவது எதிரில்இ எதிர் முனையில்இ அல்லது ஏதொ
ஒரு விதத்தில் பெண்ணின் குரலை கேட்பவர் தவறான
சிந்தனையுள்ளவராக இருந்தால் அந்தப் பெண் பற்றி தவறான
எண்ணத்தில் ஆட்பட்டு விடும் அளவிற்கு பெண்கள் தங்கள்
குரலை வலைத்து நெளித்து பேசக் கூடாது.
நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால்
குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ
அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்
குர்ஆன் 33:32)
இந்த வசனத்தின் ஆரம்பம் இறைத்தூதர்களின் மனைவிகளை
விழித்து இந்த அறிவுரையை முன் வைக்கின்றது. நபியுடைய
மனைவிகளுக்கே இந்த அறிவுரை என்றால் மற்ற முஸ்லிம்
பெண்கள் இதில் இன்னும் கூடுதல் கவனத்தோடு இருக்க
வேண்டும்.
பெண்கள் எல்லாத் துறைகளிலும் இன்று காலூன்றி வந்துக்
கொண்டிருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் பெண்களும்
விதிவிலக்கல்ல. இந்தக் காலத்தில் எவ்வித ஆதரமும்
இல்லாமல் பெண்கள் குரல் வெளியில் தெரியக் கூடாது
என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பது எந்த வித்திலும்
முறையல்ல.
மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியைஇ மருத்துவ
பெண்கள்இ தெலிபோன் ஆப்ரேட்டர்கள் இந்த பெண்களெல்லாம்
நான் குரலை வெளியில் காட்ட மாட்டேன் என்று சொன்னால்
அது எப்படி இருக்கும்?
இந்த வேலைகள் மட்டுமல்ல அனுமதிக்கப்பட்ட எந்த
வேலையிலும் பெண்கள் தங்கள் குரலை வெளிபடுத்தலாம் ஆனால்
ஒரே கன்டிஷன் அந்தக் குரல் பிறரை சபலப்படுத்தும்
நெளிவு சுளிவுகளுடன் இருக்கக் கூடாது. தேவைக்கு
அதிகமாகவும் பேசக் கூடாது.
விளம்பரத்துறை என்பது வளர்ந்து நிற்கும் ஒரு தொழிற்
துறையாகும். அதில் குரல்கள் முக்கியத்துவம்
பெறுகின்றன. தரமான விளம்பரங்களை தேர்ந்தெடுத்து குரல்
கொடுத்தால் அதை தடுக்க நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை.
417)வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் இலாபம் வைக்கலாம்?
உதாரணத்திற்கு 100 ரூபாய் அஸல் விலைக்குரிய பொருளுக்கு
எத்தனை சதவிகிதம் வரை இலாபம் வைக்கலாம்? இதற்கு
குர்ஆன் ஹதீஸ் மூலம் விளக்கம் தர வேண்டுகிறேன்.
pureheart092((at)yahoodotco.in
நம்பிக்கை கொண்டோரே!
உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில்
உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத்
தவிர. உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள்
மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
வியாபாரத்தில் இத்துனை சதவிகிதம் தான் லாபம் வைக்க
வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை.
அப்படி கூறவும் முடியாது. ஏனெனில் உற்பத்தியின் அளவை
பொருத்தே பொருளுக்கான விலைகள்
நிர்ணயிக்கப்படுகின்றன. உற்பத்தி பெருகும் போது
சந்தையில் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
உற்பத்தி குறையும் போது விலையுயற்வு என்பது தவிர்க்க
முடியாமல் போய் விடும்.
உற்பத்தி அதிகமாக இருக்கும் போது குறைந்த லாபத்தைப்
பெரும் வியாபாரிகள் அல்லது விவசாயிகள் பொருளுக்கு
தட்டுப்பாடு ஏற்படும் போது விலையுயர்வு செய்வதை
தடுக்க முடியாது.
குறிப்பாக உற்பத்தி பொருள்கள் பெருமளவு
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நிலையில் விலைக்
கட்டுப்பாடு என்பது தொழிலாளிகள் - விவசாயிகளுக்கு
செய்யப்படும் அநீதியாகி விடும்.
உற்பத்தி அளவை பொருத்து அரசு விலை நிர்ணயம் செய்யலாம்
என்றாலும் அதிலும் கூட இடைதரகர்களின் தலையீடு பெருமளவு
இருக்கின்றது. இடை தரகர்களின் தலையீடு இல்லாமல் அரசு
தனது நேரடி கவனிப்பை செலுத்தி விவசாயிகள்இ
தொழிலாளிகள் தங்கள் உற்பத்தியை நேரடியாக சந்தைக்கு
எடுத்து சென்று விற்பனை செய்யும் சூழ்நிலை உருவானால்
தான் விலை குறையும்.
பொருளுக்கு தட்டுபாடு ஏற்படும் அந்த நேரத்தில் அதிக
லாபத்திற்கு விற்கலாம் என்ற எண்ணத்தில் பொருள்களை
பதுக்கி வைப்பதை மட்டுமே .இஸ்லாம் தடை செய்கின்றது.
இந்த செயலை யாராவது செய்தால் அவர்களை அரசின்
கவனத்திற்கு கொண்டு செல்வது மக்களின் பொருப்பாகும்.
நுகர்வோரை பொருத்தவரை விலை அதிகமான இருக்கும்
பொருட்களை வாங்கித்தான் தீர வேண்டும் என்ற சட்டம்
எதுவுமில்லை. ஒரு பொருலை விலை பேசுகிறோம்
அப்போதுதான் அதன் விலை அதிகம் என்று தெரிகின்றது.
இப்போது அதை வாங்கித்தான் தீர வேண்டுமா என்றால்
இஸ்லாம் ஒரு வழியை காட்டுகின்றது.
''விற்பவரும் வாங்குபவரும்
பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்
கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! என்று நபி(ஸல்)
கூறுகிறார்கள் பல நபித்தோழர்கள் அறிவிக்கும் இந்த
செய்தி புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
விலை கூடுதலாக தெரியும் போது நாம் வியாபாரத்தை
முறித்துக் கொண்டு வந்து விடலாம். அதை விட்டு விட்டு
பொருளை வாங்கி வந்து விட்டு குறைச் சொல்லிக்
கொண்டிருக்கக் கூடாது. இதை புரிந்துக் கொள்ள
வேண்டும்
418)
முஸ்லிம்பெண்கள் அழகுபடுத்தும் நிலையம் வைத்து தொழில்
செய்வதை இஸ்லாம் என்ன கூறுகிறது?
digitalcom(at)sltnetdotlk
அழகுபடுத்திக் கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கிற்னது.
இங்கிருந்துதான் அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற
எந்த தனி கட்டுப்பாடும் இல்லாத போது பொது
அனுமதியுள்ள இடங்களில் தன்னை அழகுபடுத்திக்
கொள்ளலாம்.
அழகுபடுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியிலிருந்தே அழகு
நிலையங்கள் நடத்தலாம் என்ற அனுமதியும் கிடைத்து
விடுகின்றது. இன்றைக்கு அழகு நிலையங்கள் என்பது நல்ல
வருவாயை ஈட்டிக் கொடுக்கும் ஒரு தொழிலாகவே
ஆகிவிட்டது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனிதனியாக நடத்தப்படும்
இந்த அழகு நிலையங்களை முஸ்லிம் பெண்கள் நடத்தலாம்.
அழகு படுத்திக்கொள்ள வரும் பெண்களுக்கு போதிய
பாதுகாப்பு இருக்கும் பட்சத்தில் இதை தடை செய்ய
முடியாது.
சிகை அலங்காரம்இ முக அலங்காரம்இ உடை அலங்காரம் என்ற
பகுதிகளாக நடத்தப்படும் இந்த தொழிலில் சிலவற்றை நாம்
- குறிப்பாக முஸ்லிம் பெண்கள் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
முக அலங்காரம் செய்யும் போது புருவ முடிகளை முழுவதும்
நீக்கி விட்டு ஐப்ரோவால் புருவம் வளைத்துக் கொள்ளும்
பழக்கம் பரவலாக இருக்கின்றது. இஸ்லாம் இதை
தடுக்கின்றது.
புருவ முடியை
மழித்துக்கொள்ளும் பெண்களை நபி(ஸல்)
சபித்துள்ளார்கள். (புகாரி) எனவே அதில் கவனம்
செலுத்த வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் தலை முடியை குறைத்துக் கொள்ள எந்த
தடையையும் நம்மால் காண முடியவில்லை.
உடை அலங்காரம் செய்யும் போது பிற பெண்களின் அந்தரங்க
பகுதிகளை பார்க்காமல் உடையளங்காரம் செய்ய வேண்டும்.
ஏனெனில்
ஒரு பெண் பிற பெண்ணின் அந்தரங்க
பகுதிகளை பார்க்க வேண்டாம் என்று நபி(ஸல்)
தடுத்துள்ளார்கள். (திர்மிதி)
இவைகளை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
419)
50லட்சம் ஹஜ்ஜின் பெயரால் மோசடி செய்தவர்களைப் பற்றி
மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக கட்டுரை எழுதுங்கள்.
அல்லது உணர்வு பத்திரிக்கையிரல் வந்த கட்டுரையை
வெளியிடுங்கள்
sultanms(at)hotmaildotcom
நாமும் உணர்வு பத்திரிக்கையில் வந்த கட்டுரையை
படித்தோம். அவர்கள் பணத்தை மோசடி செய்தார்களா
என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்
உறுதி அவர்கள் நிர்வாக திறமையற்றவர்கள். ழூதாங்கள்
நிர்வாக திறமையற்றவர்கள் என்பதை அவர்கள் பல
சந்தர்பங்களில் நிரூபித்துள்ளார்கள்ழூ எனவே ஹஜ் உம்ரா
உட்பட பிற எதிலும் அவர்களை மக்கள் நம்பாமல்
இருப்பதுதான் நல்லது. குறிப்பாக இந்த முறை ஹஜ்ஜில்
காயப்பட்டவர்கள் இவர்களை மக்களுக்கு அடையாளப்படுத்திக்
கொண்டு இருப்பது அவசியமாகும்.
420) ஹைதர்
அலிக்கு வக்ப் வாரியம் கிடைத்துள்ளது சரிதானா..?
sultanms(at)hotmaildotcom
வக்ஃப் வாரியம் என்பது முஸ்லிம்களுக்கு சொந்தமானது.
எனவே அதை முஸ்லிம்கள் தான் நிர்வகிக்க வேண்டும்.
கடந்தக் காலங்களில் சிலமுஸ்லிம்களும் முஸ்லிம்
அல்லாதவர்களும் அதை நிர்வகித்துள்ளார்கள். இப்போது
அது முஸ்லிம்கள் கைக்கு வந்துள்ளது என்பதில் சந்தோஷம்
தான் ஆனாலும் அந்த பொறுப்பு ஹைதர் அலிக்கு சென்றதை
சரிகாண முடியவில்லை.
காரணம் ஒன்றுஇ தமுமுக என்பது ஒரு மக்கள் இயக்கம் என்று
தன்னை அறிவித்துக் கொண்டுள்ள நிலையில் அதிகமான
முஸ்லிம்கள் இந்த இயக்கத்தை நம்பியுள்ளார்கள் என்று
அவர்களாகவே சொல்லிக் கொள்ளும் நிலையில் அந்த
இயக்கத்தில் உள்ள படித்தஇ துடிப்புள்ளஇ நிர்வாகத்
திறமையுள்ள பிற யாருக்காவது அந்த பொறுப்பை
கொடுத்திருக்க வேண்டும். மாநில அளவில் துடிப்புடன்
செயல்படும் ஒரு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளுக்கு
ஏராளமான வேலைகள் தேங்கி கிடக்கும் இந்நிலையில் புதிய
பொறுப்புகளை அவர்கள் ஏற்றால் அவர்களால் அதை ஒழுங்காக
நிறைவேற்ற முடியாது. நிறைவேற்ற முடியாது என்று தெரிந்த
நிலையில் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றால்
ழூஆசைழூதான் காரணமாக இருக்க முடியும்.இதனால் அந்த
பொறுப்பு மாநில நிர்வாகிக்கு தகுந்ததல்ல.
காரணம் இரண்டுஇ ஏற்கனவே தமுமுக என்ற இயக்கம் திமுகவின்
ஒரு கிளையாக செயல் படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. நாம்
பார்த்தவரை அது ஓரளவு உண்மையும் கூட. இந்நிலையில்
மாநில நிர்வாகிகளுக்கு கிடைக்கும் இத்தகைய பதவிகள்
அவர்களை கலைஞருக்கு எதிராக குரல் கொடுக்க விடாது.
மனித மனநிலை அதுதான். கலைஞரின் தூண்டுதல் இல்லாமல்
இந்த பொறுப்பு ஹைதரலிக்கு கிடைத்திருக்க
வாய்ப்பில்லை.
பத்திரிக்கை அறிக்கைஇ நேரடியான சந்திப்பு போன்ற
சிறுஅளவிளான நடவடிக்கைகளோடு தமுமுகவின் கலைஞர்
எதிர்ப்பு கோஷங்கள் முடிந்து விடும். அதற்கான
ஏற்பாடுகளை கருணாநிதி மிக சிறப்பாகவே செய்துக்
கொண்டிருக்கிறார்.
421)
இஸ்லாத்தில் மருமகள்களின் நிலை என்ன? அவர்கள் எவ்வாறு
கணவனால் மாமனாரால் மற்றும் மாமியாரால் மதிக்கப்பட
வேண்டும் விளக்கம் தயவு செய்து தரவும்.
frah96(at)yahoodotcom
மருமகளாக வீட்டுக்கு வரும் பெண்ணை ழூமருழூமகளாகவே
மாமியார்கள் எடுத்துக் கொண்டால் பெருவாரியான பிரச்சனை
தலைக்காட்டாமலேயே போய்விடும். ஆனால் மாமியார்களின்
மனநிலை இதற்கு மாற்றமாகவே உள்ளது.
புதுமாப்பிள்ளையாக ஆகியுள்ள ஆண்மகன் புது மனைவியை
பார்த்த சந்தோஷத்தில் தனது இயல்பை சற்றே மாற்றிக்
கொள்கிறான். இது அவனையும் அறியாமல் நிகழ்வதாகும்.
தாயின் உள்ளத்தில் முதல் சந்தேகம் விதைக்கப்படும்
தருணம் அது. நேற்று வரை பார்த்த மகன் இன்றைக்கு சற்று
மாறி இருப்பதை தாயால் சரிகாண முடியவில்லை. வந்தவள்
தான் காரணம் என்ற சந்தேகம் வலுக்கின்றது. ஆனாலும்
திருமணம் ஆன புதிது என்பதால் வாய் திறக்க முடியாமல்
நிற்கும் மாமியார் சில நாட்களில் வாய் திறக்க துவங்கி
விடுகிறார்.
திருமணம் முடிக்கக் கூடிய காலகட்டம் வரை ஆண்மகன்
முழுக்க அந்த குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக
இருக்கிறான். அவனது உழைப்பு - பொருளாதாரம் அனைத்தும்
அந்த குடும்பத்திற்காகவே நிகழ்கின்றது.
திருமணம் ஆன உடன் புதிதாக வந்த பெண் அதில் பங்குக்கு
வந்து விட்டாள் என்ற எண்ணமும் மாமியாரின் மனதை
குழப்பத்துவங்குகின்றது. மகனிடம் ஏற்பட்ட ஆரம்ப
மாற்றங்கள் இறுதி வரை மாமியாரிடம்
எதிரொலிக்கத்துவங்கி விடுகின்றது. விளைவு மாமியார்
மருமகள் போர்களம் நீடிக்கத் துவங்கி விடுகின்றது.
மாமியார்களின் பக்கம் எவ்வித நியாயமும் இல்லாத போதும்
மருமகள்களே அனைத்து குற்றத்திற்கும் பொறுப்புதாரி
என்ற நிலை உருவாகின்றது.
மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்
குடம் என்று மண் குடம் பொன்குடமாக புதிய மூலாம்
பூசிக் கொள்கின்றது.
இந்த நிலை மாற வேண்டுமானால் மாமியார்களின் மனநிலை மாற
வேண்டும். எதார்த்தங்களை அவர்கள் புரிந்துக் கொள்ள
வேண்டும். வீட்டிற்கு வந்த பெண்ணை தனது மகளாக
பாவிக்கத்துவங்க வேண்டும். தனது வயிற்றில் பிறந்த பெண்
பிள்ளையை எப்படி பார்க்கிறார்களோ அப்படி அந்தப் பெண்
பிள்ளையையும் பார்க்க வேண்டும் பழக வேண்டும். அரவனைக்க
வேண்டும்.
மருமகள்
நாம் ழூமருழூமகளாகத்தான் இந்த வீட்டிற்கு
வந்துள்ளோம். அதாவது புதிய தாய் வீட்டிற்கு
வந்துள்ளோம். இங்குள்ளவர் மாமியார் என்ற பெயர் பெற்ற
மற்றொரு தாய் என்பதை அந்தப்புதுப் பெண் தன் மனதில்
நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக வந்த அந்தப்
பெண்ணின் நடவடிக்கை எதுவொன்றும் அந்த வீட்டில்
உள்ளவர்களின் மனதில் வேறுவிதமான சந்தேகங்களை கிளப்பாத
அளவிற்கு மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது
அந்தப் பெண்ணின் பொறுப்பாகும். புதிதாக அந்த
வீட்டிற்கு சென்ற ஆரம்பகால நடவடிக்கைகளே எல்லோர்
மனதிலும் ஆழமாக பதியும். அந்த ஆரம்ப காலங்கள் (அது
வருடம் வரையில் கூட நீடிக்கலாம்) அந்த வீட்டார் மனதில்
இந்த பெண் பற்றிய நல்லெண்ணெத்தை ஏற்படுத்தி விட்டால்
பிறகு ஏற்படும் தவறுகள் கூட அவர்களிடம் பெரிய அளவு
பாதிப்புகளை ஏற்படுத்தாது.
குறிப்பாக இந்தப் பெண் தன் மகனை பிரித்து கூட்டிக்
கொண்டு சென்று விடுவாள் என்ற எண்ணம் அறவே வராத
அளவிற்கு நடந்துக் கொள்வது மிக முக்கியம். தனி
குடித்தனம் என்பது திருமணம் முடிந்தவுடன் துவங்க
வேண்டிய ஒன்றல்ல. தனி குடும்பமாக (அதாவது குழந்தைகள்
குறிப்பாக ஒரு குழந்தையாவது) ஆன பிறகு தனி குடித்தனம்
பற்றி யோசிக்கத்துவங்கலாம்.
குறிப்பாக ஆண் மகனை எதிர்பார்த்து நிற்கும்
குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்லும் பெண் தன் கணவனை
அவனது கடமைகள் முடியும் வரை அந்த குடும்பத்துடன்
இருக்கும் படியாக நடந்துக் கொள்வது அந்தப் பெண்ணின்
மீது அனைவருக்கும் அளவுக்கதிகமான பாசத்தை ஏற்படுத்தி
கொடுத்து விடும்.
இவை அனைத்தும் தனிப்பட்ட அறிவுரைகள் தான். இஸ்லாமிய
சட்ட விதியில் கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உறவே
விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
எனவே கணவன் தன் மனைவி தன் வீட்டில் எப்படி நடந்துக்
கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை மனைவிக்கு வழங்கலாம்
அவர்கள் இருவரும் பேசி முடிவு செய்ய வேண்டியவை அவை.
கணவனின் அறிவுரைப்படி மாமியாரை அவர்கள் சார்ந்தவர்களை
மதித்து நடந்துக் கொள்ள வேண்டியது மனைவியை
சார்ந்ததாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் மனைவிக்கு
கட்டளையிடும் உரிமை கணவனுக்கு இல்லை. கட்டளையாக
இல்லாமல் பரஸ்பர புரிந்துணர்வு முறையில் நடந்துக்
கொள்ள வேண்டியவை இவை.
422) சானியா
மிர்சா ஒரு முஸ்லிம் பெண்மணி என்று எல்லோரும்
அறிந்தது. ஒரு இஸ்லாமிய பெண் டென்னிஸ் விளையாடும் போது
அரைகுறையாக ஆடை அணிந்து விளையாடுவது மனதிற்கு மிகுந்த
வருத்தத்தை அளிக்கிறது. விளையாட்டை பார்ப்பவர்கள்
அதிகம் ஆண்களே! ஆண்கள் விளையாட்டை ரசிக்கிறார்களா?
அல்லது உடம்பை ரசிக்கிறார்களா? என்பது அவரவர்கள்
மனதிற்கு தெரியும். ஹைர். இப்படி ஆடை அணிந்து விளையாட
இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா?
yusuffdeen(at)gmaildotcom
சானியா பல புள்ளிகள் பெற்று இந்தியாவிற்கு பெருமை
சேர்த்தாலும் அவரது குறை உடைகளால் அவர் சார்ந்த
கொள்கைக்கும் பெண்ணினத்திற்கும் அவர் இழிவைத்தான்
கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
டென்னிஸுக்கும் அதை விளையாடும் பெண்கள் உடுத்தும்
உடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் டென்னிஸ்
வர்கம் தொடர்ந்து இத்தகைய உடைகளையே வீரர்களை உடுத்த
வைக்கின்றது.
பொதுவாகவே பணம் கொழிக்கும் விளையாட்டுகள்
அனைத்திலும் முதலாளித்துவ ஆணாதிக்கவாதிகளிமே
இருக்கின்றன. அவர்கள் தீர்மானிப்பதுதான் விளையாட்டும்
அது சார்ந்த வெற்றித் தோல்விகளும்.
டென்னிஸை விட அதிக ஆண்களும் பரந்த இடத்திலும்
விளையாடப்படும் கிரிகெட் விளையாட்டில் ஆண்கள் அணியும்
உடையை விட குறுகிய இடத்தில் பெண்கள் விளையாடும்
டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் அணியும் உடை மிகக்
குறைவு. பெண்கள் முழு உடலையும் மறைத்து உடை அணிந்த
விளையாடினாலும் டென்னிஸ் விளையாட முடியும். ஆனாலும்
அது நடக்காது. காரணம் முதலாளித்துவ ஆண்கள். மிக மிக
குறைந்த அளவு கீழாடையும் இறுக்கமான மேலாடையும்
ஆண்களுக்கு விருந்தளிப்பதற்கான ஏற்பாடு என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.
இந்த விளையாட்டுகளும் அது சார்ந்த உடையும் விளையாட்டு
மைதானங்களோடு முடிந்து விடும் ஒன்றல்ல. அந்த
விளையாட்டுகள் விதவிதமாக பல கோணங்களில்
வீடியோக்களில் பதிவு செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான
கிளிக்குகள் புகைப்படங்களாகின்றன. இவை
தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும்
உலவத்துவங்குகின்றன. இங்கெல்லாம் விளையாட்டுகளை விட
பெண்களின் உடல்களே விற்பனையாகின்றன.
சானியாவிற்கு இதுவெல்லாம் தெரியாத ஒன்றல்ல. இது
சானியாவின் குடும்ப அவலம் என்றே நாம் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
|