www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

புதிய கேள்வி பதில் வலைப்பூ



அன்பின் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதுதான் இஸ்லாம் இணையம் வாசகர்களின் கேள்விகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

முன்புப் போல இப்போதெல்லாம் பதில்கள் விரைவில் அப்டேட் ஆவதில்லை என்ற வருத்தம் உங்களில் பலருக்கு உண்டு. உங்களில் பலர் அதை எங்களுக்கு சுட்டிக் காட்டிக் கொண்டும் இருக்கிறீர்கள்.

அந்தத் தேக்க நிலையை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். உண்மையில் கேள்விகளுக்காக மட்டுமே இந்தத் தளத்தை நாம் நடத்தினாலும் வரும் கேள்விகளுக்கு பதிலளித்து விட முடியுமா என்றால் 'முடியாது' என்பதே பதிலாகும். அந்த அளவு கேள்விகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

பல்வேறு காரணங்களால் எங்களால் உடனுக்குடன் பதில் அப்டேட் செய்ய முடியவில்லை. அவற்றை இங்கு விளக்கிக் கொண்டிருக்க முடியாது.

வாசகர்களின் அறிவுத் தாகத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்ததில் உதித்ததே 'கேள்வி பதில் வலைப்பூ'வாகும். இது 'அறிந்தவர்கள் பதிலளிக்கும் வலைப்பூவாகும்'

ஆம் கேள்விபதிலுக்கென்று ஒரு வலைப்பூ துவங்கியுள்ளோம். இணையத்தளத்திற்கு வரும் கேள்விகள் அந்த வலைப்பூவில் பதிக்கப்படும். அந்தக் கேள்விக்கு பதில் தெரிந்த யார் வேண்டுமானாலும் பதிலை வலைப்பூவில் நேரடியாக பதித்து விடலாம். இதன் மூலம் வாசகர்களுக்கு உடனுக்குடனும் விரிவாகவும் பதில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் இன்ஷா அல்லாஹ்.

மார்க்க கேள்வி மட்டுமல்லாமல் அதை கடந்து எதைப் பற்றி வேண்டுமானாலும் வாசகர்கள் கேள்விகள் கேட்கலாம். கேள்விகளை எப்போதும் போல இதுதான் இஸ்லாமில் தான் எழுத வேண்டும். அந்தக் கேள்விகளை (நிச்சயம் கேள்வியின் தரம் பார்ப்போம். மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளும் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு) நாம் வலைப்பூவில் பதிப்போம். பதில்களை மட்டும் தான் பிறர் நேரடியாக பதிக்க முடியும்.

மாதிரிக்காக இதுதான் இஸ்லாமிலிருந்து சில கேள்விகளையும் பதில்களையும் வலைப்பூவில் பதித்துள்ளோம்.

வலைப்பூவிற்கென்று நாம் எந்த மட்டுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. யார் வேண்டுமானாலும் பதில் பதிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். தவறான - கீழ்தரமான - உதவாக்கரை வார்த்தைகள் பதிக்கப்பட்டால் அதை மட்டும் நீக்குவோம்.

முடிந்த அளவு கேள்விகளை தமிழில் கேளுங்கள். (தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு தமிழ் கீபலகை வசதி அதே பக்கத்தில் உள்ளது) ஆங்கிலக் கேள்விகள் பரிசீலிக்க கால தாமதம் ஏற்படலாம் என்பதை கவனத்தில் வையுங்கள்.

வலைப்பூ முகவரி: http://tamilislam-qa.blogspot.com

,இறைவன் நம் அனைவருக்கும் அறிவை அதிகப்படுத்தட்டும்.

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை